Categories: Cinema News latest news

ரஜினி மனசு வைத்தால் பொன்னியின் செல்வன்.? நேரில் ஆஜரானார் மணிரத்னம்…

மணிரத்னம் இயக்கத்தில் தற்போது மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், திரிஷா, சரத்குமார் என பலர் நடித்து உள்ளனர்.

இப்படம் இரண்டு பாகமாக தாயராகி வருகிறது. இந்த இரண்டு பாகத்திற்கான ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. முதல் பாகம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. தற்போது இதற்கு முன்னோட்டமாக ஒரு டீசரை பட குழு தயார் செய்து வைத்துள்ளது. அந்த டீசரை பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த டீசர் வெளியீட்டு விழாவிற்கு ரஜினி, கமல் ஆகிய இருவரும் வந்தால் நன்றாக இருக்கும், படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் என நினைத்த இயக்குனர் மணிரத்னம் அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளாராம்.

இதையும் படியுங்களேன் – இப்படி செஞ்சிட்டிங்களே சாய் பல்லவி.?! ரஜினி பட மெகா ஹிட் இயக்குனரின் நிலைமையை பாருங்க…

முதலில் ரஜினியிடம் சென்று பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளாராம். ரஜினி சொல்லும் தேதியில் டீசர் தேதியை வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறாராம். ரஜினி தேதி சொல்லிவிட்டால், விழா ஏற்பாடு ஆரம்பித்து விடலாம் என இருக்கிறாராம் இயக்குனர் மணிரத்னம்.

அதேபோல கமல்ஹாசன் துபாயில் தற்போது இருக்கிறார். அவர் இந்தியா வந்தவுடன் அவரிடமும் அழைப்பு விடுக்க மணிரத்னம் முடிவெடுத்துள்ளாராம். இந்த டீசர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாம்.

Manikandan
Published by
Manikandan