Categories: Cinema News latest news

மாநாடு படத்தில் மாஸ் காட்டினாரே தளபதி 68 படத்தில் அவரும் இருக்காரா?.. என்ன சொல்லியிருக்காரு பாருங்க!..

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 68 படத்தில் மாநாடு படத்தில் நடித்த முக்கிய நடிகர் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகிறது. அந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகள் தீயாக நடைபெற்று வரும் நிலையில், தளபதி 68 படம் தகவல்களும் அவ்வப்போது வெளியாகி விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி வருகின்றன.

இதையும் படிங்க: தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்னு சும்மாவா சொன்னாங்க!.. அப்பாவுக்கு ஒண்ணுன்னோனே ஓடோடி வந்த விஜய்!..

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவே நடிகர் விஜய் சம்மதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு மற்றும் எஸ்ஜே சூர்யா மிரட்டலில் வெளியான மாநாடு திரைப்படத்தில் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில், இயக்குனராக உருவெடுத்துள்ள மனோஜ் பாரதிராஜா மார்கழித் திங்கள் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: அட்லீ வீட்டிலேயே ஐக்கியமாகிட்டாரா கீர்த்தி சுரேஷ்!.. எல்லாம் எங்க போய் முடியப்போகுதோ!..

அப்போது, மார்கழித் திங்கள் படத்தில் தனது தந்தை பாரதிராஜாவை இயக்கிய அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொண்ட மனோஜ் பாரதிராஜாவிடம் மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததை போல அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகும் 68 படத்திலும் நீங்க நடிக்கிறீங்களா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மனோஜ் பாரதிராஜா, இதுவரை வெங்கட் பிரபு அது பற்றி என்னிடம் பேசவில்லை என்றும் கண்டிப்பா தளபதி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

Saranya M
Published by
Saranya M