Categories: Cinema News latest news

துருவ் விக்ரமை ஓரங்கட்டிவிட்டு தனுஷை பிடித்த மாரி செல்வராஜ்? இவ்வளவு மெனக்கெட்டது எல்லாம் வேஸ்ட்டா?

மாரி செல்வராஜ் தற்போது “மாமன்னன்” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இதில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் போன்றோர் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தான் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

ஆனால் மாரி செல்வராஜ் பல மாதங்களுக்கு முன்பு துருவ் விக்ரமை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை பா.ரஞ்சித் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. அத்திரைப்படத்திற்காக மாரி செல்வராஜ், துருவ் விகரமிடம் தோல் கொஞ்சம் கருப்பாக இருக்க வேண்டும் என கூற, அதற்காக பல நாட்கள் மொட்டை மாடியில் நின்று தனது தோல் நிறத்தை கொஞ்சம் மாற்றி வருகிறாராம் மாரி செல்வராஜ்.

இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு தனுஷின் புதிய திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. ஏற்கனவே “கர்ணன்” திரைப்படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென “மாமன்னன்” புராஜெக்ட்டை தொடங்கினார் மாரி செல்வராஜ்.

இதனை தொடர்ந்து “மாமன்னன்” திரைப்படத்திற்கு பிறகாவது துருவ் விக்ரம் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனுஷை வைத்து அவர் இயக்குவதாக அறிவிப்பு வெளிவந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன், மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தை குறித்த ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது “மாமன்னன்” திரைப்படத்திற்கு பிறகு துருவ் விக்ரமை வைத்து படம் இயக்கவுள்ளாராம் மாரி செல்வராஜ். அதன் பிறகுதான் தனுஷை வைத்து இயக்கவுள்ளாராம்.

இதையும் படிங்க: போதைக்கு அடிமையான ஜெய்… டாட்டா காண்பித்து எஸ்கேப் ஆன அஞ்சலி… இப்படி எல்லாம் நடந்திருக்கா?

Arun Prasad
Published by
Arun Prasad