முக்கிய நடிகருடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ்.. ஆனா இதுவரை நடக்காத ரூட்டாம்..
Aug 24, 2024, 14:30 IST
Mariselvaraj: தற்போதைய கோலிவுட் சென்சேஷனாக இருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் இணைய இருக்கும் முக்கிய கூட்டணி குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மருத்துவராக விரும்பிய மாரி செல்வராஜ் பின்னர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக இணைந்தார். கற்றது தமிழ், தங்க மீன்கள் மற்றும் தரமணி உள்ளிட்ட படங்களில் அவருடன் பணியாற்றினார். தொடர்ந்து, 2018ம் ஆண்டு பரியேறும் பெருமாள் படத்தினை இயக்கினார். இதையும் படிங்க: கமலின் மருதநாயகம் கனவு நிறைவேறுகிறதா? புதிய தொழில்நுட்பம் கைகொடுக்குமா? முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த வருடத்தின் சிறந்த படம் என்ற அந்தஸ்த்தை பெற்றது. அதை தொடர்ந்து, முக்கிய விருதுகளையும் வாங்கி குவித்தது. பின்னர், தனுஷ் நடிப்பில் கர்ணன் படத்தினை இயக்கினார். அப்படமும் பெரிய அளவிலான வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.
mariselvaraj தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான மாமன்னன் படத்தினை இயக்கி இருந்தார். இப்படத்தில் வடிவேலுவை குணசித்திர நடிகராக மாற்றி அசத்தி இருப்பார். படமும் பலரிடத்திலும் நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையும் படிங்க: கூலி படத்திலும் மல்ட்டிஸ்டார் கூட்டணியா? ஆனா இந்த முறை வச்சதுதான் செம ட்விஸ்ட்டு!..
இப்படத்தினை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் பைசான் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தினை தொடர்ந்து மாரி செல்வராஜ் மீண்டும் தனுஷை வைத்து படம் இயக்க இருக்கிறார். இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் வரலாற்று படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
mariselvaraj தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான மாமன்னன் படத்தினை இயக்கி இருந்தார். இப்படத்தில் வடிவேலுவை குணசித்திர நடிகராக மாற்றி அசத்தி இருப்பார். படமும் பலரிடத்திலும் நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையும் படிங்க: கூலி படத்திலும் மல்ட்டிஸ்டார் கூட்டணியா? ஆனா இந்த முறை வச்சதுதான் செம ட்விஸ்ட்டு!..
தொடர்ந்து, அவர் நடிப்பில் வெளியான வாழை திரைப்படம் நேற்று வெளியாகி இருக்கும் நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. வாழ்க்கையின் மற்றுமொரு வாழ்வியலை சொல்லி இருப்பதாகவும் பல இயக்குனர்களே மாரி செல்வராஜை புகழ்ந்து கொண்டுள்ளனர்.