மாஸ்டர் பூனை என்னானது தெரியுமா? ரகசியம் பகிர்ந்த விஜய் நண்பர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட ஸ்டார் கேஸ்டிங்கோடு பொங்கலையொட்டி வெளியான படம் மாஸ்டர். தியேட்டர் ரிலீஸ்தான் என படக்குழு உறுதியாக இருந்தது. இந்தநிலையில், கடந்த 13-ம் தேதி வெளியான மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்தது.
படத்தில் பல கேரக்டர் மனதில் பதியவில்லை என்றாலும் இன்னொரு சைடில் சில ஸ்கோரிங் நடந்தது. அதில் விஜயின் காப்பு மற்றும் அவரின் பூனைக்கு ஒரு முக்கிய பங்குண்டு. படத்தில் சில காட்சிகளில் வரும் பூனை கடைசியில் என்ன ஆனது என பல அனுமானங்கள் நிலவியது. இதை தீர்க்கும் விதமாக நடிகரும், தளபதியின் நண்பருமான சஞ்சீவ் விடையளித்து இருக்கிறார்.
அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், உங்கள் அனுமானங்கள் சரி தான். பூனை காப்பாற்றப்பட்டு விட்டது என படத்தின் காட்சியையும் வெளியிட்டு இருக்கிறார். அட இதை யாரும் பார்க்காம போய்ட்டோமேப்பா!