×

பழைய ஜாவா பைக்கில் திமிராக அமர்ந்து இருட்டில் முரட்டு போஸ் கொடுத்த மீரா மிதுன்... !

மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.

 

அந்த விவகாரத்தில் சர்ச்சை நடிகையாக பிரபலமான மீராவிற்க்கு பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து வெளியில் வந்ததும் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருவதாக அவ்வப்போது சமூகவலைத்தங்களில்  பதிவிடுவார். கூடவே தானே தன் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்வதுபோல் சர்ச்சையில் சிக்கி கன்னாபின்னமாக்கப்படுவார்.

அந்த வகையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பழைய ஜாவா பைக்கில் திமிராக அமர்ந்து இருட்டில் முரட்டு போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு " உன்னை போல யாரும் இல்லை, அது தான் உன்னுடைய பலம்"  என தத்துவதுடன் பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News