alaigal
சமீப காலமாக ஏற்கனவே ஹிட் ஆன திரைப்படங்கள் ரீ ரிலீஸ் என்ற பெயரில் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு அதை ரசிகர்கள் அதிக ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர். சமீபத்தில் வெளியான கில்லி திரைப்படம். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் வெளியான இந்த திரைப்படத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப டிஜிட்டல் முறையில் அதை ரீ ரிலீஸ் செய்திருக்கின்றனர்.
அந்த படம் சமீபத்தில் வெளியான விஷாலின் ரத்னம் திரைப்படத்தின் வசூலை விட அதிகளவு வசூலை வாரி இறைத்து வருகிறது. அந்த அளவுக்கு கில்லி திரைப்படம் மக்கள் மத்தியில் இன்றளவு வரையும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதை போல் வருகிற மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்தநாள் என்பதால் ட்ரிபிள் ட்ரீட்டாக பில்லா, மங்காத்தா,. தீனா போன்ற படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளன.
இதையும் படிங்க: உயிரை கையில் பிடிச்சிக்கிட்டே டேன்ஸ் ஆடிய சூர்யா!.. செம ரிஸ்க்கா இருக்கே!.. அட அந்த படமா?!…
இப்படி ஏற்கனவே ஹிட்டான திரைப்படங்களை ரீ ரிலீஸ் செய்து திரையரங்குகள் லாபம் பார்த்து வருகின்றன. இந்த நிலையில் படங்களுக்கு மட்டும் தான் ரீ ரிலீஸா? நாங்களும் வருவோம் என்ற தொனியில் பிரபல சூப்பர் ஹிட் ஆன ஒரு சீரியல் மீண்டும் மக்களுக்காக மறு ஒளிபரப்பில் சந்திக்க வருகிறது. அது திருமுருகன் இயக்கத்தில் வெளியான மெட்டி ஒலி சீரியல் தான்.
இது ஏற்கனவே மறு ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் மீண்டும் விகடன் யூடியூப் சேனல் மூலமாக மே ஒன்றாம் தேதியிலிருந்து மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் 811 எபிசோடுகளை தாண்டி சன் டிவியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிய தொடராகும். இந்த சீரியலில் டெல்லி குமார், காவேரி காயத்ரி வனஜா உமா மகேஸ்வரி ரேவதி பிரியா சேத்தன் போஸ் வெங்கட் நீலிமா ராணி திருமுருகன் சாந்தி வில்லியம் மற்றும் தீபா வெங்கட் ஆகியோர் நடித்திருந்தனர்.
metti
இதையும் படிங்க: விரைவில் சின்னத்திரையில் தலைகாட்டப் போகும் வடிவேலு! சீரியல்னுதான் பாக்குறீங்க.. அதான் இல்ல
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த சீரியல் மீண்டும் மூன் டிவியிலும் கொரோனா காலத்தின் போது சன் டிவியிலும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இப்போது youtube சேனல் மூலமாக விகடன் சேனல் இந்த மெட்டி ஒலி சீரியலை மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
ஜெயம் ரவி…
Idli kadai:…
Vijay: கரூரில்…
Idli kadai:…
Rajinikanth: தமிழ்…