சினிமாவின் பெரிய தூண்களாக விளங்கியவர்கள் நடிகர்கள் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர். இவர்கள் படத்திலும் சரி அரசியலிலும் சரி இவர்களின் நட்பு பாராட்டுக்குரியது. மேலும் அவரவர் கெரியரில் தன்னிச்சையாக விளங்கினர்.
தற்போதைய தலைமுறையினருக்கு மாபெரும் உந்துதலாகவு இருந்து வருகிறார்கள். இவர்களின் வளர்ச்சியை இன்று வரை யாராலும் அடைய முடியவில்லை. அவர்களின் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கும் மாபெரும் சக்தியை நான் பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வருவேன் என்று கோடம்பாக்கத்தில் ஒரு நடிகர் சுற்றி வந்தார்.
இதையும் படிங்கள் : எம்.ஜி.ஆர் – சந்திரபாபு சண்டை… உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?
அவர் வேறு யாருமில்லை. நடிகர் ராஜேஷ். இவரின் ஆசையே சிவாஜி, எம்.ஜி.ஆரின் பெருமைகளை நான் அடைந்தே தீருவேன். அவர்களே பெருமைபடும் அளவிற்கு நான் வந்தே தீருவேன். அவர்கள் இருவரும் என்னை அழைத்து விருந்து வைப்பார்கள் என்ற சபதத்துடன் சினிமாவிற்குள் நுழைந்தாராம்.
ஆனால் அதன் பிறகு தான் தெரிந்ததாம் அவர்கள் மாபெரும் சக்தி. அவர்களுக்கு இந்த பெருமை எல்லாம் இயற்கை கொடுத்த வரம் என்று. நாம் நினைத்தது எல்லாம் தப்பு என்று தெரிந்தபிறகு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து பின் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவர் நினைத்த மாதிரி சினிமாவில் பெரிய அளவில் போக முடியவில்லை என்று வருத்தத்துடன் கூறினார்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…