×

நள்ளிரவில் மூச்சு திணறல்: ஐஸ்வர்யா ராய்க்கு அதிகரித்த கொரோனா தொற்று!

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர குடும்பமாக ஜொலிக்கும் அமிதாப் பச்சன்  குடும்பத்தில் ஜெயா பச்சனை தவிர அனைவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலில் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர். அதையடுத்து மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பதாக ட்விட்டரில் அறிவித்தார்.

 

இதையடுத்து குடும்பத்தில் உள்ள ஜெயா பச்சன்,  ஐஸ்வர்யா ராய், மற்றும் ஆராதனா ஆகிய மூவரையும் பரிசோதித்து பார்க்கையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என முதல் கட்ட பரிசோதனை கூறியது. ஆனால், இரண்டாம் கட்ட பரிசோதனையில் நோய் உறுதி செய்யப்பட்டது.  நட்சத்திர குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கும் அடுத்தடுத்து கொரோனா நோய் தொற்று இருப்பதை அறிந்த அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

பின்னர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா பச்சன் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து நள்ளிரவில்  இருவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக  அவர்கள் இருவரும் மும்பையில் உள்ள நனாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

From around the web

Trending Videos

Tamilnadu News