Connect with us

Cinema News

தமிழ்ப்படம் 3 ரெடியாகுது!.. அந்த பெரிய மாஸ் படத்தை வச்சு செய்யப் போறேன்.. மிர்ச்சி சிவா மிரட்டுறாரே!

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி உள்ள சூது கவ்வும் 2 படத்தின் டீசர் இன்று வெளியானது. விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா என சூது கவ்வும் படத்தில் நடித்த நடிகர்களே இந்த படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர், வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள சூது கவ்வும் 2 திரைப்படம் கலாட்டா காமெடியாக வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: ‘காவாலா’ தமன்னாவுக்கு கண்ட இடத்துல காத்துவாங்குதே!.. கன்ட்ரோல் இல்லாமல் போகும் யங்ஸ்டர்ஸ்!..

காசு பணம் துட்டு மணி மணி என முதல் பாகத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான பாடல்கள் எல்லாம் வேறலெவலில் ஹிட் அடித்தது போல இந்த படத்திலும் “உங்க அப்பனுக்கும் பெபே.. தாத்தனுக்கும் பெபே” என்கிற பாடலுடன் டீசர் கலர்ஃபுல்லாக களைகட்டுகிறது.

இந்நிலையில், அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மிர்ச்சி சிவா, கோட் படத்தில் நடிக்காதது ஏன் என்கிற கேள்விக்கு, வெங்கட் பிரபு எனக்கான கதாபாத்திரத்தை வடிவமைக்கவில்லை என்றும் வடிவமைத்து இருந்தால் நிச்சயம் கூப்பிட்டு இருப்பார் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: பொண்ணுங்களோட கற்பனைலதான் சந்தோஷமா வாழ முடியும்!.. சூது கவ்வும் 2 டீசரே தாறுமாறா இருக்கே பாஸ்!..

தமிழ்ப்படம் 3ம் பாகம் வர வாய்ப்பிருக்கிறதா? என்கிற கேள்விக்கு அந்த படம் வர வேண்டும் என்றால், மற்ற படங்கள் வந்தாலே போதும். இப்போ கேஜிஎஃப் போல பல பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகி உள்ளன. சி.எஸ். அமுதன் சார் கதையை ரெடி செய்து விட்டால் நிச்சயம் தமிழ்ப்படம் 3 உருவாகும். இப்போதைக்கு சுந்தர். சி இயக்கத்தில் அடுத்து கலகலப்பு படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்கப் போகிறேன் எனக் கூறியுள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top