ரீமேக் ராஜாவாக இருந்தவரை மோகன் ராஜாவாக அடையாளப்படுத்தியதே ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படம் தான். அந்த படத்தில் அரவிந்த் சாமி நடித்த சித்தார்த் அபிமன்யு வில்லன் ரோலை யாருமே அவ்ளோ எளிதில் மறந்து விட முடியாது.
ஹீரோவை விட வில்லனை ரசிகர்கள் அதிகம் விரும்பினால் அந்த படம் நிச்சயம் மிகப்பெரிய ஹிட்டாகும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக இருந்த படம் தான் தனி ஒருவன்.
இதையும் படிங்க: ரஜினிக்கு கொடுத்த BMW காரை விடுங்க!.. மாவீரன் நடிகை சொந்தமா உழைச்சு வாங்குன காரை பாருங்க!..
ஆனால், அப்படியொரு மோசமான வில்லன் கதாபாத்திரத்துக்கு பரவை முனியம்மாவை வைத்து ரெஃபரன்ஸ் எடுத்தார் மோகன்ராஜா என்றால் நம்ப முடிகிறதா? நீங்க நம்பலைன்னாலும் அதுதான் நெசம் என்பது போல இந்த விஷயத்தை மோகன் ராஜாவே பேட்டி ஒன்றில் தற்போது ரிவீல் செய்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
இதுவரை தமிழ் சினிமாவில் காட்டாத ஒரு வில்லனாக சித்தார்த் அபிமன்யூவை காட்ட வேண்டும் என பல படங்களின் ரெஃபரன்ஸ் எடுத்து வந்த நான் கடைசியாக சி.எஸ். அமுதன் இயக்கிய தமிழ்ப்படம் சீனையும் ரெஃபரன்ஸாக எடுத்து அந்த கதாபாத்திரத்தை உருவாக்கினேன் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சஞ்சயால இயக்குனராலாம் நிலைக்க முடியாது… இதுதான் அவருக்கு செட் ஆகும்…
இதை சொல்லும் போது அமுதனே நம்பவில்லை. சும்மா சொல்லாதீங்க சார் என்றார். தமிழ்ப்படம் கிளைமேக்ஸில் வில்லன் திரும்பி இருப்பார். அதுவரை யார் வில்லன் என்றே தெரியாது. கடைசியாக அந்த சேர் திரும்பியதும் பரவை முனியம்மா தான் வில்லி.
அவர் சொல்லும் ஒரு வசனம் தான் என்னோட சித்தார்த் அபிமன்யூ உருவாக காரணமே என்ற மோகன் ராஜா ”உன்னை ஹீரோவாக்க நான் வில்லன் ஆகிட்டேன்” என அவரோட பாட்டி சொல்வார் அதுதான் எனக்கு இந்த கேரக்டரை ஸ்ட்ராங்கா உருவாக்க இன்ஸ்பயர் பண்ணது என்றார்.
TVK Vijay:…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…