×

தெலுங்கில் கரை ஒதுங்க நினைக்கும் கோலிவுட் இயக்குனர்கள்... என்ன காரணம்?

இயக்குனர் ஷங்கரைத் தொடர்ந்து பல முன்னணி கோலிவுட் இயக்குனர்கள் தெலுங்கில் படமெடுக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம். 
 

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், கமர்ஷியல் இயக்குனர் எனப் பெயரெடுத்த லிங்குசாமி என கோலிவுட்டின் முக்கிய இயக்குனர்கள் தெலுங்கில் படமெடுக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள். இயக்குனர் ஷங்கர் - ராம்சரண் இணையும் புதிய படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பல மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இந்தப் படத்தைத் தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்கிறார். அதேபோல், இயக்குனர் லிங்குசாமி இளம் ஹீரோ ராம் பொத்தினேனி நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். ஏறக்குறைய மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் லிங்குசாமி திரைப்படம் ஒன்றை இயக்கப் போகிறார். 

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்கள் இருவர் ஒரேநேரத்தில் நேரடித் தெலுங்குப் படம் இயக்கப்போவதாக அறிவித்திருப்பதைக் கவலையோடு பார்க்கிறார்கள் தமிழ் சினிமா புள்ளிகள். இவர்கள் மட்டுமல்லாது இன்னும் சில கோலிவுட் இயக்குனர்களும் டோலிவுட்டில் நேரடியாகப் படம் இயக்கும் முடிவுக்கு வந்துவிட்டார்களாம். என்னவென்று விசாரித்தால் தமிழ் சினிமா சூழலைச் சுட்டிக்காட்டுகிறார்களாம் இயக்குனர்கள். தயாரிப்பாளர் பட்ஜெட் குறைப்பு என்ற பெயரில் காட்டும் கெடுபிடிகளும், வியாபாரச் சூழலும்தான் கோலிவுட் இயக்குனர்களை டோலிவுட்டில் கவனம் செலுத்த வைத்திருக்கிறது என்கிறார்கள். 

From around the web

Trending Videos

Tamilnadu News