×

ஆதரவில்லா சிறுமிகளிடம் அத்துமீறிய 16 பேர்! ஓராண்டுக்குப் பின் நிகழ்ந்த சோகம்!

திண்டிவனம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பாட்டி ஒருவரின் கட்டுப்பாட்டில் வளர்ந்து வந்த சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் சோகமான சம்பவம் நடந்துள்ளது.

 

திண்டிவனத்தில் கருத்து வேறுபாடுகள் காரணமாக தம்பதிகள் பிரிந்து மறுமணம் செய்து கொண்டதால் அவர்களின் இரு பெண் குழந்தைகளும் பாட்டியின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரையும் உறவினர்கள் உள்ளிட்ட 16 பேர் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டது சர்ச்சைகளைக் கிளப்பியது.

அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டாலும் இப்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு குழந்தைகள் இருவரையும் சென்னையில் வசிக்கும் தாய் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் தற்போது அந்த சிறுமிகளில் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.

கடந்த வியாழனன்று வீட்டில் வாந்தி எடுத்து மயக்கமடைந்த சிறுமியை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து சிறுமியின் மரணம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News