MS Subbulakshmi: தமிழ் சினிமாவில் வாழ்ந்து வெற்றி கண்ட பழம் பெறும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாவது வழக்கம் தான். அப்படி எம் எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை படமாக இருக்கும் நிலையில் முக்கிய நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
பயோபிக் என்பது கோலிவிட்டிற்கு வழக்கமான விஷயம் தான். ஜெயலலிதாவின் வாழ்க்கையில் தலைவி என்ற பெயரிலும், சாவித்திரி வாழ்க்கையை மகாநதி என்ற பெயரிலும் படமாக்கினர். இதில் நடிகைகள் கங்கணா ரணாவத், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தங்களுடைய நடிப்பை வெளிப்படுத்தி நல்ல வரவேற்பை பெற்றனர்.
இதையும் படிங்க: இனிமே மரண அடிதான்.. சூர்யா ரேஞ்சுக்கு மாறிய சூரி!.. கருடன் டிரெய்லர் சொல்வது என்ன?..
அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு பெண் பிரபலத்தின் வாழ்க்கை படமாக இருக்கிறது. மதுரையைச் சேர்ந்த சுப்புலட்சுமி பாரத ரத்னா விருது வாங்கிய முதல் பெண் பாடகியாவார். பாடகியாக இருந்தாலும் சில தமிழ் படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். இவரின் வாழ்க்கையை தற்போது படமாக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.
பெங்களூரை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை உருவாக்க இருக்கிறது. சுப்புலட்சுமி வேடத்தில் நடிக்க திரிஷா மற்றும் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கிறது. இதில் நடிகை திரிஷா ஒப்பந்தமாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: போதுமப்பா விட்ருங்க.. சீக்கிரம் கோட் படத்தினை கழட்டிவிட போகும் தளபதி விஜய்… அடுத்த ப்ளான் என்ன தெரியுமா?
Kantara Chapter…
STR49 :…
TVK Vijay:…
Vijay: தமிழ்…
Idli kadai:…