
Cinema News
ஏவிஎம் வைத்த டாஸ்க்!.. அசால்ட் பண்ணிய எம்.எஸ்.வி.. ‘அந்த நாள் ஞாபகம்’ பாடல் உருவான கதை!..
Published on
By
தமிழ் சினிமாவில் ரம்மியமான மெல்லிசை பாடல்களை கொடுத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். 1940 முதல் 1980 வரை பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். இளையராஜாவுக்கு முன்பு முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர். எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பலருக்கும் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தார்.
ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் சிவாஜி நடித்து 1968ம் வருடம் வெளியான திரைப்படம் ‘உயர்ந்த மனிதன்’. இது சிவாஜியின் 125வது திரைப்படமாகும். இப்படத்தில் வாணிஸ்ரீ, சிவக்குமார், சவுகார் ஜானகி, அசோகன், மேஜர் சுந்தர் ராஜன் என பலரும் நடித்திருந்தனர். இந்த படம் சிவாஜிக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இப்படத்தை கிருஷ்ணன் – பஞ்சு இணைந்து இயக்கியிருந்தனர்.
இதையும் படிங்க: நடிகர் திலகம் சிவாஜியை கோபப்படுத்திய கண்ணதாசன் பாட்டு!.. நடந்தது இதுதான்!..
இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடலும் மிகவும் இனிமையாக இருக்கும். இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற ‘அந்த நாள் ஞாபகம்’ பாடல் எப்படி உருவானது பற்றிதான் இங்கே பார்க்கபோகிறோம். கதைப்படி, பணக்காரன் நண்பனை அழைத்து கொண்டு சுற்றுலா செல்கிறான். அப்போது தனது வாலிப வயது நினைவுகள் பற்றி அவன் பாடுகிறான் என்பதுதான் சூழ்நிலை.
அப்போது சில ஹாலிவுட் படங்களில் ஹீரோ பாட்டு பாடுவார்… நடுநடுவே வசனங்களும் பேசுவார்.. எனவே, அதுபோல இந்த பாடலை அமைக்க முடியுமா? என ஏவிஎம் குமரன் கேட்டார். ஆனால், ஹாலிவுட்டில் இருப்பது மல்ட்டி டிராக் சவுட்ண்ட் சிஸ்டம். பாடலுக்கு நடுவே வசனங்களை சேர்த்து கொள்ளலாம். ஆனால், நம்மிடம் இருப்பது சிங்கிள் டிராக். இசையை துவங்கினால் பாட்டு முடியும் வரை நிறுத்த முடியாது. இதில் எப்படி வசனங்களை சேர்ப்பது?.. இசையை எங்கே நிறுத்துவது?.. மீண்டும் எப்படி துவங்குவது?.. இங்கு அது சாத்தியமில்லை’ என எல்லோரும் கூறிவிட்டனர். ஆனாலும், எம்.எஸ்.வியிடம் இதுபற்றி கேட்போம் என முடிவெடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: ‘பாசமலர்’ பட வெற்றிக்கு முக்கியமான காரணம்! சிவாஜியோ சாவித்ரியோ இல்ல – பிரபல இயக்குனர் சொன்ன சீக்ரெட்
அப்போது அங்கே வந்த எம்.எஸ்.வியிடம் இதுபற்றி சொல்லி அந்த ஆங்கில பாடல்களையும் அவருக்கு ஒலிபரப்பி காட்டியுள்ளனர். அதைக்கெட்ட எம்.எஸ்.வி ‘இதே போல ஒரு பாடலை அமைத்து தருகிறேன்’ என அவர் சொல்ல எல்லோருக்கும் ஆச்சர்யம். ஆனால், அதை அவர் கச்சிதமாக செய்தும் காட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் அப்படி ஒரு பாடல் வந்தது அதுதான் முதல்முறை. இதில், எல்லோருக்கும் நல்ல பெயர் கிடைத்தது.
அந்த பாடலுக்கு நடுவே சிவாஜியும், மேஜர் சுந்தர ராஜனும் பேசும் வசனங்களையும் சேர்த்து அசால்ட் செய்திருப்பார் எம்.எஸ்.வி. வாலி சிறப்பாக பாடல் எழுத, சூழ்நிலையை புரிந்துகொண்டு டி.எம்.சவுந்தர ராஜனும் அழகாக இப்பாடலை பாடி கொடுத்தார். டி.எம்.எஸ், சிவாஜி, எம்.எஸ்.வி, வாலி என அனைவருக்கும் அவர்களுக்கு பிடித்த டாப் 10 பாடல்களில் இந்த பாடல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிவாஜி தனக்கு செய்ததை பாக்கியராஜுக்கு செய்த எம்.ஜி.ஆர்!.. ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!…
Rashmika Mandana: சிவகார்த்திகேயனின் புதிய படத்தை யார் இயக்கப் போகிறார் அல்லது அந்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என...
Ajith Vijay: கோலிவுட்டில் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக வளம் வருபவர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல். சின்ன பட்ஜெட்டுகளில் சில படங்களை தயாரித்திருக்கிறார்....
Seeman: இயக்குனர் மணிவண்ணனிடம் சில படங்களில் வேலை செய்தவர் சீமான். மேலும் பாஞ்சாலங்குறிச்சி, வாழ்த்துக்கள், தம்பி, இனியவளே, வீரநடை ஆகிய 5...
Vijay TVK: சினிமாவில் உச்சம் தொட்டு அடுத்து அரசியலிலும் சாதிக்கவேண்டும் என்ற முனைப்போடு வந்தார் விஜய். ஆரம்பத்தில் மாணவ மாணவியர்களுக்கு தேவையான...
Vijay: தற்போது அரசியல் களத்தில் தவெக கட்சிக்கு பெரும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் பெரும்...