ஒரு படம் என்று எடுத்துக் கொண்டால் அந்தப் படத்தின் கதை பெரும்பாலும் அப்பாவுக்கும் மகளுக்கும் உள்ள பாசத்தை அடிப்படையாகவும் அண்ணனுக்கும் தங்கைக்கும் உள்ள பிணைப்பை அடிப்படையாகவும் ஒட்டுமொத்த குடும்ப பாசத்தை அடிப்படையாகவும் இப்படித்தான் பெரும்பாலான படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அண்ணன் தங்கை பாசத்திற்கு மூல காரணமாக இருக்கும் படம் என்றால் அது சிவாஜி சாவித்திரி நடிப்பில் வெளிவந்த பாசமலர் திரைப்படம் தான். நம்முடைய எதார்த்தமான வாழ்க்கையிலும் அண்ணன் தங்கையை பார்க்கும் ஒரு சில பேர் பெரிய சிவாஜி சாவித்திரி என்றுதான் கூறுவார்கள்.
இதையும் படிங்க : இவங்களாலதான் ‘கைதி’ படமே மிஸ் ஆச்சு! மனம் திறந்த மன்சூர் அலிகான்
அந்த அளவுக்கு பாசமலர் திரைப்படம் அனைவரது வாழ்க்கையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிவாஜியை வைத்து பெரும்பாலும் பா வரிசையிலேயே படத்தை எடுத்த இயக்குனர் பீம்சிங். இவர்தான் இந்தப் படத்தையும் எடுத்தார்.
நடிகர் திலகம் நடிகையர் திலகம் இவர்கள் இரண்டு பேரும் இந்தப் படத்தில் நீ ஒசத்தியா நான் ஒசத்தியா என்ற அளவுக்கு போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள். இவர்களைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இந்த படம் அந்த அளவுக்கு வரவேற்பை பெற்றிருக்காது என்பதுதான் ரசிகர்களின் கருத்தாகவும் இருந்து வந்தது.
இதையும் படிங்க : சூர்யா – ஜோதிகாவின் திருமணத்தினை தடுத்து நிறுத்தினேனா? இதுதான் நடந்தது ? மனம் திறந்த சிவக்குமார்..
ஆனால் படத்தின் இயக்குனரான பீம்சிங் அவரோ இந்த படத்தின் வெற்றிக்கு சிவாஜியும் சாவித்திரியும் காரணம் இல்லை என அவருடைய மகனிடம் ஒரு சமயம் கூறினாராம். அதாவது இந்த படத்தில் சிவாஜி சாவித்திரியை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் படம் வெற்றி அடைந்திருக்கும் என்றும்,
படத்திற்கு கண்ணதாசனையோ எம் எஸ் விஸ்வநாதனையோ தவிர வேறு யார் பாடலுக்கு இசை அமைத்திருந்தாலும் இந்த படம் வெற்றி அடைந்திருக்கும் என்று கூறினாராம். ஏனெனில் இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்திருப்பது கதை மட்டுமே என்பது பீம்சிங்கின் கருத்தாக இருந்திருக்கிறது.
இதையும் படிங்க : இதுக்கு பதில் அந்த மாறி படம் எடுத்து பொழைக்கலாம்- ப்ளூ சட்டை மாறனை பொளந்துகட்டிய இயக்குநர்
ஆகவே ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைவது படத்தின் கதை மட்டும் தான் என்பதை உறுதியாக நம்பியவர் பீம்சிங் என இந்த தகவலை கூறிய சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.