
Cinema News
சிவாஜி நடித்த பாடலுக்கு குரல் கொடுத்த டி.எம்.எஸ்!.. ஆனாலும் அப்செட் ஆன எம்.எஸ்.வி..
Published on
By
TMS SIVAJI: தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்திற்கு ஒரு பாடலை உருவாக்குவது எனில் இயக்குனர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஒரு அறையில் இருப்பார்கள். என்ன சூழ்நிலை என இயக்குனர் சொல்ல இசையமைப்பாளர் அதற்கு மெட்டு போடுவார். அதில், ஒரு மெட்டை இயக்குனரோ அல்லது தயாரிப்பாளரோ தேர்ந்தெடுப்பார்.
அதன்பின் அந்த மெட்டுக்கு பாடலாசிரியர் பாடல் வரிகளை எழுதுவார். அதில் ஏதும் திருத்தம் இருந்தால் இயக்குனர் சொல்வார். பாடல் வரிகள் எழுதி முடிக்கப்பட்டவுடன் அந்த பாடலை யார் பாடினால் பொறுத்தமாக இருக்கும் என முடிவு செய்து ரிக்கார்டிங் தியேட்டருக்கு வரவழைத்து பாடலை ஒலிப்பதிவு செய்வார்கள்.
இதையும் படிங்க: திருப்பூர் குமரன் குடும்பத்திற்கு சிவாஜி செய்த உதவி!.. மறைக்கப்பட்ட சிவாஜியின் மறுபக்கம்…
50,60களில் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகியோரின் படங்களுக்கு அதிகமாக இசையமைத்தது எம்.எஸ்.விஸ்வநாதன் எனில் அந்த பாடல்களுக்கு குரல் கொடுத்தது டி.எம்.சௌந்தர ராஜன்தான். எம்.ஜி.ஆருக்கும் சரி.. சிவாஜிக்கும் சரி அவரின் குரல் அவ்வளவு பொருத்தமாக இருக்கும். ஆனால், சில சமயம் அவர்களுக்கு வேறு சில பாடகர்களும் பாடியுள்ளனர்.
சிவாஜி இரட்டை வேடத்தில் நடித்த படம் கௌரவம். 1973ம் வருடம் வெளியான இந்த படத்தில் ‘பாலூட்டி வளர்த்தக் கிளி பழம் கொடுத்த பார்த்த கிளி’ என்கிற பாடல் வரும். இந்த பாடல் உருவானபோது டி.எம்.எஸ். ஊரில் இல்லை. எனவே, எம்.எஸ்.விஸ்வநாதனே இப்பாடலை பாடிவிட்டார். அதற்கும் சிவாஜியும் நடித்து முடித்துவிட்டார்.
இதையும் படிங்க: சிவாஜியை வைத்து இயக்கிய பிரபல இயக்குனர்… எம்.ஜி.ஆரை மட்டும் இயக்கலையாம்.. ஏன் தெரியுமா..?
ஊரில் இருந்து டி.எம்.எஸ் வந்ததும் அந்த பாடலை டி.எஸ். சவுந்தரராஜனுக்கு போட்டு காட்டியுள்ளார் எம்.எஸ்.வி. பாடலை பார்த்த டி.எம்.எஸ் ‘அண்ணே நீங்கள் ரொம்ப நல்லா பாடி இருக்கீங்க.. ஆனா, சிவாஜி நடிப்பு எங்கயோ இருக்கு.. உங்க குரல் எங்கயோ இருக்கு’ என சொல்ல, அப்ப நீங்களே பாடிருங்க என எம்.எஸ்.வி சொல்லிவிட்டார்.
அதன்பின், சிவாஜியின் நடிப்பை பார்த்துக்கொண்டே டி.எம்.எஸ். அந்த பாடலை பாடினார். இப்போது போல் அப்போது தொழில் நுட்பம் இல்லை. நடுவில் நிறுத்தியெல்லாம் பாடமுடியாது. டி.எம்.எஸ் ஒரே மூச்சில் அந்த பாடலை பாடி முடித்துவிட்டு வெளியே வந்தபோது எம்.எஸ்.வி அங்கே இல்லை. என்ன இருந்தாலும் தான் பாடியது செட் ஆகாமல் போகிவிட்டதே என அப்செட் ஆகிவிட்டாராம்.
இதையும் படிங்க: தனது வீட்டை சிவாஜிக்கு விற்ற என்.எஸ்.கிருஷ்ணன்!.. அதுக்கு அவர் சொன்ன காரணம்தான் ஹைலைட்!..
வடிவேலு ஒரு முட்டாள் : சமீபத்தில் வடிவேலு ஒரு 10 youtube-பர்கள் சேர்ந்து சினிமாவை அழித்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களை தூங்க...
நான் கைக்கூலி அல்ல தினக்கூலி : kpyபாலா இன்டர்நேஷனல் கைக்கூலி அவர் தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி பாலா...
TVK Vijay: கரூர் தவெக கட்சி கூட்டத்தின் போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து இருக்கும்...
TVK Vijay: தவெக கட்சியின் மாவட்ட பயணத்தில் கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த சந்திப்பில் 41க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். இரண்டு...