Connect with us
sivaji

Cinema History

திருப்பூர் குமரன் குடும்பத்திற்கு சிவாஜி செய்த உதவி!.. மறைக்கப்பட்ட சிவாஜியின் மறுபக்கம்…

Sivaji ganesan: சிறுவயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கி பல வருடங்கள் நாடகங்களில் பல வேடங்களிலும் நடித்து பராசக்தி திரைப்படம் மூலம் சினிமாவில் நுழைந்தவர்தான் நடிகர் திலகம் சிவாஜி. முதல் படத்திலேயே தான் ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகராக மாறினார். பல கதாபாத்திரங்களிலும் நடித்து நடிப்புக்கு இலக்கணம் வகுத்தார். அரசன், ஏழை, பணக்காரன், தொழிலாளி, முதலாளி, காவல் அதிகாரி, பாதிரியார், திருடன், ரவுடி, சுதந்திர போராட்ட வீரர், கடவுள் கதாபாத்திரங்கள் என இவர் ஏற்காத வேடங்களே இல்லை. இவர் அளவுக்கு பல கதாபாத்திரங்களிலும் நடித்த நடிகர்கள் திரையுலில் உலக அளவில் கூட யாருமே இருக்க மாட்டார்கள்.

இதையும் படிங்க: மேக்கப் போட்டதும் நம்பியாரை முறைத்த சிவாஜி!.. அட கேரக்ட்ரா மாறுவதுன்னா இதுதான் போல!..

இவருக்கு பின்னால் வந்த பல நடிகர்களுக்கும் நடிப்புக்கு பாதை போட்டு கொடுத்தவர் இவர். அதனால்தான் அவரை நடிகர் திலகம் என அழைக்கிறார்கள். பொதுவாக திரையுலகில் மற்றவர்களுக்கு உதவியர்கள் என்றால் எல்லோருக்கும் எம்.ஜி.ஆர் மட்டுமே நியாபகத்திற்கு வருவார்கள். அவருக்கு பின் விஜயகாந்தை சொல்வார்கள்.

ஆனால், சிவாஜி செய்த பல உதவிகள் யாருக்குமே தெரியாது. பலமுறை, பல சூழ்நிலைகளிலும் பலருக்கும் உதவியிருக்கிறார். சில படங்களுக்கு சம்பளம் வாங்காமல் கூட நடித்திருக்கிறார். இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் வந்த போது அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தன் வீட்டிலிருந்த அனைத்து நகைகளையும் அப்படியே அள்ளிகொடுத்தவர் சிவாஜி. இன்றைய மதிப்பில் அது ரூ.300 கோடிக்கும் மேல் இருக்கும்.

இதையும் படிங்க: கடனில் மூழ்கிய சிவாஜி… மகனாக நின்று ரஜினி செய்த காரியம்… என்ன மனுஷன்ப்பா…

அதேபோல், ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் நாடக நடிகராக நடித்திருப்பார். இந்த படத்தில் பல வேஷங்களில் வருவார். அதில், திருப்பூர் குமரன் வேடமும் ஒன்று. இந்த படத்தை பார்த்த திருப்பூர் குமரனின் மனைவி சிவாஜியை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். அப்போது அவரின் குடும்ப சூழ்நிலையை புரிந்துகொண்ட சிவாஜி பல வகைகளிலும் அந்த குடும்பத்திற்கு உதவியிருக்கிறார்.

ஆனால், சிவாஜி செய்த உதவிகள் வெளியே தெரியாமல் போனது. அவரை சிலர் கஞ்சன் எனவும் சொல்வார்கள். ஆனால், உண்மையில் அவர் அப்படி இல்லை என்பதற்கு மேலே சொன்ன இரண்டு உதாரணங்களே போதும்.

இதையும் படிங்க: ஆசையா கேட்ட சிவாஜி.. அதிர்ச்சியான ரஜினி.. ஆனா செஞ்சாரு பாருங்க அதான் சூப்பர்ஸ்டார்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top