இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக் திரைப்படமாக உருவாகி உள்ள 800 படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தலைமையில் வெளியிடப்பட்ட இந்த ட்ரெய்லரை பார்த்த விஜய்சேதுபதி ரசிகர்கள் அச்சச்சோ இந்த படத்தை விஜய் சேதுபதி மிஸ் செய்து விட்டாரே எனக்கூறாமல், நல்லவேளை மக்கள் செல்வன் எஸ்கேப் ஆகிவிட்டார் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இயக்குநர் ஸ்ரீபதி இயக்கத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் தேவ் படேலின் அண்ணனாக நடித்த மதூர் மிட்டல் தான் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக நடித்துள்ளார்.
இதையும் படிங்க: சினிமா அவ்ளோ பெரிய சீன் இல்லை!.. அதை விட முக்கியமானது நிறைய இருக்கு.. பொசுக்குன்னு சொன்ன எச். வினோத்!..
ஒரு ஃபிரேமில் கூட முத்தையா முரளிதரன் மாதிரியே தெரியலையே என்றும் விஜய்சேதுபதி நடித்திருந்தால் ரொம்பவே பொருத்தமாக இருப்பார் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
மேலும், படத்தின் மேக்கிங் ரொம்பவே சுமாராக உள்ளது என்றும் பிரபாகரனை காட்டும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், விஜய்சேதுபதி அந்த ரோலில் நடித்திருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்துருக்கும் என கமெண்ட்டுகள் பறக்கின்றன.
இதையும் படிங்க: ஜெயிலரில் தமன்னா செஞ்ச வேலை!. கடுப்பில் சன் பிக்சர்ஸ்!. அதனாலதான் ஒன்னுமே கொடுக்கலயாம்!…
விமர்சனங்களை தாண்டி ட்ரெய்லரில் உள்ள கதையை பார்த்தால் கிரிக்கெட் உலகில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய முத்தையா முரளிதரன் போடும் பந்துகள் எல்லாம் நோ பால் என சொல்லி கிளம்பிய சர்ச்சையை ஹைலைட் செய்து படத்தின் கதையை ஸ்ரீபதி இயக்கிய விதம் மட்டுமே ட்ரெய்லரில் கவனத்தை ஈர்க்கிறது.
ஆனால், முத்தையா முரளிதரன் முகத்தை பார்த்தால் ஏதோ சிஜி செய்து வைத்தது போலவே செயற்கையாக இருப்பது படத்திற்கு எந்தளவுக்கு கை கொடுக்கும் என்பது சந்தேகத்தையே எழுப்புகிறது.
TVK Vijay:…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…