×

என் உயிருக்கு ஆபத்து.. இயக்குனர் சீனு ராமாசாமி அதிர்ச்சி டிவிட்...

 

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல், கண்ணே கலைமானே உள்ளிட்ட சில படங்களைய இயக்கிவர் சீனுராமாசமி. 

தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் மூலம் விஜய் சேதுபதியை இவர்தான் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தார். 

சமீபத்தில், இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என கோரிக்கை வைத்தவர்களில் சீனுராமாசமியும் ஒருவர். அதன்பின் அப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகினார்.

இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் ‘என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம்.’ என டிவிட் செய்துள்ளார்.

800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என கூறியதற்காக அவருக்கு யாரேனும் கொலை மிரட்டல் விடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது. விரைவில் செய்தியாளர்களை அவர் சந்திக்கவுள்ளார். அப்போது இதுபற்றி அவர் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News