அஜித்தும் விஜய்யும் இப்போ எங்க பாக்கெட்ல தான்!.. தலைகால் புரியாம ஆடும் தயாரிப்பு நிறுவனம்!..

அல்லு அர்ஜுன் வைத்து புஷ்பா படத்தை உருவாக்கியுள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம், அஜித்குமார் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்தையும் தயாரித்து வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படம் உருவாகி வருகிறது.

அஜித்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் படத்தையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தற்போது அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் .வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மோகன், மீனாட்சிசெளத்ரி என பலர் நடித்து வரும் கோட் திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் இரண்டு பாடல்களும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. விரைவில் கங்கை அமரன் வரிகளில் மூன்றாவது பாடல் ரிலீசாகப் போகிறது.

கோட் படத்தை தமிழ்நாட்டில் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கி வெளியிடுகிறது. அதேபோல, கோட் படத்தின் ஆந்திரா மற்றும் தெலங்கானா ரிலீஸ் உரிமையை தற்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது.

விஜயின் கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் அனைத்து இடங்களிலும் அந்த படத்தை நல்ல விலைக்கு விற்று இருப்பதாகவும் படம் வெளியானால் மிகப்பெரிய வசூல் வேட்டையை நிகழ்த்தும் என்றும் கூறுகின்றனர்.

Related Articles

Next Story