காதலருடன் கடற்கரையில் ஒரே ஜாலி.. டிவி நடிகை அலப்பறை தாங்கலயே!..
Sat, 30 Jan 2021

தமிழில் ஷார்ட் பிலிம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நக்ஷத்திரா நாகேஷ். அதன்பின்னர், திருமணம், வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து தமிழக வீடுகளின் செல்ல மகள் ஆனார். கடந்த பல ஆண்டுகளாக சின்னத்திரையில் இருந்தாலும் சர்ச்சைகளில் சிக்காமல் இருந்துவந்த இவர், அண்மையில் சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்றைக் கொடுக்கப்போவதாக நேற்று இன்ஸ்டாவில் அறிவித்திருந்தார்.
மேலும், திடீரென காதலரை அறிமுகப்படுத்திய அவர் காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்களை பகிர்ந்தார்.
இந்நிலையில், கடற்கரையில் காதலருடன் ஜாலியாக விளையாடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.