
Cinema News
ஷூட்டிங்கில் விஜய் எங்களை ஏமாத்திட்டார்… கடைசியில் எங்களை அழுக வைத்து விட்டார்!…
Published on
By
Vijay: நடிகர் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருமாதிரி நடந்துக்கொள்வார். கேமரா ஆன் ஆகிவிட்டால் ஆளே மாறிவிடுவார். அவரால் நாங்க தான் அழுகணும் எனவும் நடிகர் ஸ்ரீகாந்த் சொல்லி இருக்கும் தகவல்கள் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.
ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் நண்பன். இப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். இந்தி 3 இடியட்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாக்கிய இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதையும் படிங்க: நான் பாடின முதல் தமிழ் பாட்டு அதுதான்!. ஆனா படமே டிராப் ஆயிடுச்சி!.. சோகத்துடன் சொன்ன எஸ்.பி.பி..
முதல்முறையாக விஜயுடன் ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் இணைந்து நடித்தனர். அந்த அனுபவம் குறித்து ஸ்ரீகாந்த் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அப்பேட்டியில் இருந்து, நானும் ஜீவாவும் டான்ஸ் ஸ்டப்புக்களை ஒரு மணி நேரமாக ப்ராக்டீஸ் செய்துக்கொண்டு இருப்போம்.
விஜய் சார் அப்போ வருவார். இரண்டு நிமிஷம் பார்த்துவிட்டு டேக் போகலாம் எனக் கூறிவிடுவார். புரியுதா சார் எனக் கேட்டால் எனக்கே தெரியலை எனச் சொல்லிக்கொண்டே பிச்சு உதறிவிடுவார். எங்களுக்கு ஷாக் ஆகிவிடும். சில டைம் இவ்வளோ பெரிய ஸ்டப்பா? என ஷாக் ஆகி கேட்பார்.
இதையும் படிங்க: அதுல நான் நடிக்க கூடாதுனு பெரிய எதிர்ப்பு! அதையும் மீறி ஹிட் கொடுத்த ஸ்ரீகாந்த்.. என்ன படம் தெரியுமா?
கட் பண்ணி எடுத்துக்கலாமா எனக் கேட்பார். எனக்கும், ஜீவாவுக்கும் சந்தோஷமாகி விடும். இப்போதான் நம்ம ரூட்டுக்கு வந்து இருக்கார் என போட்டுக்கொள்வோம். ஆனால் கேமரா முன்னாடி ஒருமாதிரி இருப்பார். மானிட்டரில் ஒரு மாதிரி ஆடுவார். நாங்க என்ன நடிகருடா இவரு என நினைத்து கொள்வோம்.
எங்களை பார்த்து கொஞ்சம் குறைச்சு ஆடுங்க. என்னால முடியாது எனச் சொல்வார். ஆனால் கேமராவில் அடித்து தூள் கிளப்புவார். அவர் மட்டுமே தெரிவார். வேறு யாருமே தெரியமாட்டார்கள். ஒருக்கட்டத்தில் எங்களுக்கு தான் டான்ஸ்களை முடிப்பதற்குள் அழுகையே வந்துவிட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
Pradeep Ranganathan: கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படம் மூலம் ஹீரோவாகவும் வெற்றி பெற்றார்....
Hariskalyan: இந்த வருட தீபாவளிக்கு என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன என்பதை பற்றிய தகவல் தான் இந்த செய்தியில் நாம் பார்க்க...
STR49: முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் மற்ற நடிகர்களை போல தொடர்ந்து நடிக்கும் நடிகராக சிம்பு இல்லை. திடீரென்று ஒரு ஹிட்...
Biggboss: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த 8 சீசன்களாக இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும்...
Pradeep: கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய...