Categories: latest news television

எதிர் நீச்சல்: வசமாய் சிக்கிய நந்தினி… சீறி பாய்ந்த மாமியார்… அதகளம் செய்த கதிர்…

Ethir Neechal: சன் டிவியில் வெற்றிநடை போட்டு கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல். டி.ஆர்.பியில் நம்பர் 1 இடத்தை தக்க வைத்து கொண்டிருந்த இந்த சீரியலில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து சமீபத்தில் மரணமடைந்தார்.

இவர் இருந்தவரை சீரியலை பார்ப்பதற்கு மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் தற்போது இவர் இல்லாத கதையை எவ்வாறு கொண்டு செல்வது என தெரியாமல் கதையை மற்ற கதாபாத்திரங்களை நோக்கி நகர்த்தி செல்கிறார் இயக்குனர்.

இதையும் வாசிங்க:இந்த ரேஞ்சுக்கு சம்பளம் கேட்டா சோலி முடிஞ்சது!.. ஓவர் ஆட்டம் போடும் சிவகார்த்திகேயன்..

இதில் இன்று நடந்த சம்பவம் பார்ப்பவர்களுக்கு சற்று பாவமாகவே இருந்தது. நந்தினி தான் சமைத்த உணவுகளை முதியோர் இல்லத்திற்கு எடுத்து செல்ல புறப்படும்போது அங்கு ஞானம் மற்றும் கதிர் ஆகியோர் வந்து விடுகின்றனர். கதிர் எதர்ச்சையாக சமையலறைக்குள் நுழைய அங்கிருந்த உணவுகளை பார்த்து விடுகிறார்.

பின் அது என்ன என்று நந்தினியிடம் கேட்க நந்தினியோ சமாளிக்க முடியாமல் திணறுகின்றாள். அந்த சமயம் பார்த்து முதியோர் இல்ல மேலாளர் நந்தினிக்கு கால் செய்ய கதிருக்கு அனைத்து உண்மைகளும் தெரியவருகிறது. அதே சமயம் இவ்வளவு நாட்களாய் மருமகள்களுக்கு உதவிய மாமியார் தனது மகனை காணவில்லை எனும் ஏக்கத்தில் மருமகள்களுக்கு எதிராக மாறி நந்தினியை பற்றிய உண்மையை கதிரிடம் கூறிவிடுகிறார்.

அந்த நேரத்தில் முதியோர் இல்ல பெண் வீட்டிற்கு உள் வந்து சண்டையிட தனது முன்பணத்தை தருமாறு நந்தினியிடம் முறையிடுகிறார். நந்தினியோ நிலைமையை சமாளிக்கமுடியாமல் தன் கழுத்தில் இருந்த தாலியை கழட்ட முற்படுகிறாள். உடனே நந்தினியின் மாமியார் நந்தினியின் கன்னத்தில் அறைய நந்தினியோ பொங்கி எழுகிறாள்.

இதையும் வாசிங்க:என்னோட அந்த படத்துக்கு லோகேஷ் வெறித்தனமான ரசிகன்!.. மிஷ்கின் பகிர்ந்த சீக்ரெட்..

இவ்வளவு நேரம் உங்க மகன் பேசும்போது இந்த கோபம் வரவில்லையா?. என்னை பொறுத்தவரை இது வெறும் செயின் தான். இத கட்டுன அவர் என்ன மதிச்சாதான் நான் தாலிய மதிப்பேன் என ஆவேசத்தில் பேசுகிறார். மேலும் இது என் அப்பா போட்ட தாலி.. இதை கழட்டி எறிய எனக்கு உரிமை உண்டு என வாதிடுகிறார். முதியோர் இல்ல மேலாளரோ மறுநாள் காலை வரை நேரம் கொடுத்துள்ளார். அதற்குள் நந்தினி வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.

இது ஒருபுறம் இருக்க கதிர் ஞானம் இருவரும் மாடிக்கு செல்கின்றனர். அங்கிருந்த ஜீவானந்தத்தின் பெண்ணை பார்த்து யார் என கேட்க ஈஸ்வரியின் மகளோ அந்த பொண்ணு அம்மாவின் நண்பரின் மகள். அவளது அம்மா அவளை அம்மாவிடம் பார்த்து கொள்ளுமாறு விட்டு சென்றதாக கூறுகின்றாள்.

கதிரோ அனைவரையும் மாடிக்கு அழைக்க அனைவரும் வருகின்றனர். இந்த பொண்ணு யாரென்று ஈஸ்வரியிடம் கதிர் கேட்க அவள் அம்மா ஈஸ்வரியிடம் பார்த்து கொள்ளுமாறு விட்டு சென்றதாக கூறுகின்றார். மேலும் அவளை பற்றி பேச உனக்கு உரிமை இல்லை என கதிரை கண்டிக்கின்றார். இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைந்தது. நாளைய எபிசோடில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் வாசிங்க:தமிழ் சினிமாவில் அந்த டார்ச்சரை அனுபவித்தேனா?.. நித்யா மேனன் வெளியிட்ட ஷாக்கிங் ஸ்டேட்மென்ட்!..

Published by
amutha raja