Categories: Cinema News latest news

ரியல் லேடி சூப்பர்ஸ்டார் வந்ததும்!.. பம்ம ஆரம்பித்தாரா நயன்தாரா.. அந்த பயம் இருக்கட்டும்!..

சிம்ரன் ஹீரோயினாக கொடி கட்டி பறந்த போது ஜோடி படத்தில் திரிஷா தோழி கதாபாத்திரத்தில் அடையாளமே தெரியாமல் நடித்திருந்தார். அதன் பின்னர் அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த மெளனம் பேசியதே படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

ஜோதிகாவும் அதே ஆண்டு வாலி படத்தில் அறிமுகமானார். ஜோதிகா மற்றும் திரிஷா ஒன்றாகவே கோலிவுட்டில் போட்டி போட்டு நடித்து ஏகப்பட்ட படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து அசத்தினர்.

இதையும் படிங்க: அடுத்த அலப்பறையை கிளப்பலாமா!.. தலைவர் 170 டைட்டில் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. கொண்டாட்டம் உறுதி!..

நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், ஜோதிகா கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் இருந்து ஒதுங்கினார். அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் தற்போது சீனியர் நடிகை போலவே நடித்து வருகிறார்.

திரிஷா, ஜோதிகாவை தொடர்ந்து நடிகை அசின் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார். அவரும் மைக்ரோமேக்ஸ் ஓனரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன நிலையில், நயன்தாரா மலையாளத்தில் சாதாரண டிவி ஆங்கராக இருந்து சில படங்களில் நடித்து தமிழில் ஐயா படம் மூலம் அறிமுகமானார். அடுத்த படமே ரஜினிகாந்த், ஜோதிகா நடித்த சந்திரமுகி படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் கட கடவென விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து லேடி சூப்பர்ஸ்டாராக உயர்ந்தார்.

இதையும் படிங்க:  அவர் கேப்டன்தான்! ஆனால் எனக்கு அம்மா – விஜயகாந்த் செய்த உதவியை நினைத்து கண்கலங்கிய பிரபலம்

ஆனால், இன்றும் நடிகை திரிஷா நயன்தாராவுக்கும் டஃப் கொடுத்து பொன்னியின் செல்வன், விஜய்யின் லியோ மற்றும் அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி என நடித்து வருகிறார். இதுவரை லேடி சூப்பர்ஸ்டார் என்கிற டைட்டில் குறித்து பேசாத நயன்தாரா தற்போது மீண்டும் திரிஷாவின் வளர்ச்சி மற்றும் அவரது ரசிகர்கள் திட்டுவதை பார்த்து தாங்க முடியாமல் தான் அப்படி பேசினாரா? என்கிற கேள்வியை சினிமா வட்டாரத்தில் பலரும் எழுப்பி வருகின்றனர்.

Saranya M
Published by
Saranya M