அடுத்த அலப்பறையை கிளப்பலாமா!.. தலைவர் 170 டைட்டில் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. கொண்டாட்டம் உறுதி!..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கி உள்ளன. நடிகர் ரஜினிகாந்த் நாளை தனது 73வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 8ம் தேதி முத்து படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ஏகப்பட்ட திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆளவந்தான் படத்தை விட முத்து படத்தை பார்க்கத்தான் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டெல்லாம் தள்ளி வைங்க.. தளபதியோட பிளானே இதுதானாம்!..

இந்நிலையில், தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ள நிலையில், ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு ஏதாவது அப்டேட் வருமா என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு சந்தோஷ செய்தியாக தற்போது லைகா நிறுவனம் நாளை மாலை 5 மணிக்கு படத்தின் டைட்டில் மற்றும் ரஜினிகாந்தின் பிறந்தநாள் வீடியோ வெளியாகும் என அறிவித்துள்ளது.

73 வயதிலும் தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக நடிகர் ரஜினிகாந்த் பாக்ஸ் ஆபிஸில் கோலோச்சி வருகிறார். இந்த ஆண்டு நடிகர் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி வசூல் ஈட்டி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. நடிகர் விஜய் பெரும் போராட்டத்தை நடத்தி லியோ மூலம் அந்த வசூலை நெருங்கினார்.

இதையும் படிங்க: பாத்தவுடனே ஜூமிங்தான்!.. டிரான்ஸ்பரெண்ட் உடையில் சூடேத்தும் தளபதி 68 பட நடிகை..

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மாலை தலைவர் 170 படத்தின் டைட்டில் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்திற்கு ’அ’ என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆண்டவன் என்கிற டைட்டில் அதிகபட்சமாக வைக்கப்படும் என்றும் சில தகவல்கள் கசிந்துள்ளன. நாளை மாலை 5 மணிக்கு படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ள நிலையில், தலைவர் 170 படம் 1000 கோடி வசூலை தமிழ் சினிமாவுக்கு சாத்தியமாக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

 

Related Articles

Next Story