Categories: Cinema News latest news

ராகவா லாரன்ஸுக்கு பெரிய கும்பிடு!.. சந்திரமுகி 2வை பார்த்து காண்டாகிட்டாரா நயன்தாரா!..

சந்திரமுகி 2, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என அடுத்தடுத்து பெரிய படங்களில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் நிலையில், லோகேஷ் கனகராஜ் நண்பரும் ஆடை பட இயக்குநருமான ரத்னகுமார் இயக்கத்தில் அடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்திற்கும் நயன்தாராவை ஹீரோயினாக புக் செய்வதாக தகவல்கள் வெளியாகின.

தமிழில் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வரும் நயன்தாராவுக்கு எந்தவொரு டாப் நடிகர் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில், ராகவா லாரன்ஸுடன் ஜோடி போடவே முடிவு செய்து விட்டார் என்றும் கூறினர்.

இதையும் படிங்க: பலபேர் என்ன திட்டினாங்க! போதும்டா சாமி – லோகேஷின் யுனிவெர்ஸுக்கு எண்ட் கார்டு போடப் போகும் படம்

ஆனால், சமீபத்தில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் 1200 கோடி வசூலை நெருங்கிய நிலையில், மீண்டும் தேசியளவில் நயன்தாராவின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்து விட்டது. இந்நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், வெளி மாநிலங்களில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தாலே பெரிய சம்பளம் கிடைக்கும் என வலை வீசி வருகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்ற்ன.

ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், தற்போது லேடி சூப்பர்ஸ்டார் ராகவா லாரன்ஸ் படத்தில் இருந்து விலகி விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.

இதையும் படிங்க: அஜித் நடத்தி வரும் அறக்கட்டளையை பற்றி யாருக்காவது தெரியுமா? ஆச்சரியமூட்டும் சுவாரஸ்யமான தகவல்

கடைசியாக ரத்னகுமார் இயக்கிய குலுகுலு படத்தை பார்த்து விட்டு இந்த முடிவை எடுத்தாரா? அல்லது சந்திரமுகி 2வை பார்த்து விட்டு நயன்தாரா கம்பியை நீட்டி விட்டாரா என ட்ரோல் செய்து கலாய்த்து வருகின்றனர்.

Saranya M
Published by
Saranya M