Categories: Cinema News latest news

நடிச்சி போரடிச்சிடுச்சா!.. கணவருக்கே வேட்டு வைக்க இப்படியொரு ரூட்டை பிடித்த நயன்தாரா?

நடிகை நயன்தாரா வெளியிட்ட புதிய புகைப்படம் ரசிகர்களை மட்டுமின்றி சினிமா உலகினரையும் சர்ப்ரைஸ் ஆக்கி உள்ளது. லேடி சூப்பர்ஸ்டார் என சினிமாவில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை தனது கால் தடத்தை பதித்து வெற்றியும் கொண்ட நயன்தாரா தொடர்ந்து பல தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதற்கு முன்னதாக டயானா மரியம் குரியன் என கேரளாவில் விஜேவாக தனது கரியரை தொடங்கினார். மலையாளத்தில் சில படங்களில் நடித்த நயன்தாரா தமிழ் சினிமாவில் ஐயா படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் உடன் சந்திரமுகி படத்தில் நடித்த நிலையில், கோலிவுட்டின் நம்பர் நடிகையாக உருவாகினார்.

இதையும் படிங்க: மனிஷா யாதவ் மட்டுமல்ல!.. பிந்து மாதவிக்கும் ரூட் போட்ட சீனு ராமசாமி?.. அடுத்த பூகம்பம் ஸ்டார்ட்?..

பல வருடங்கள் கடந்தும் இன்னமும் நம்பர் ஒன் நடிகையாக மாஸ் காட்டி வரும் நயன்தாரா சமீபத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்து பாலிவுட் ரசிகர்களையும் கொள்ளை கொண்டார்.

வரும் டிசம்பர் 1ம் தேதி நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள அன்னபூரணி படம் வெளியாக உள்ளது. சினிமாவில் ஒரு பக்கம் கொடி கட்டி பறக்கும் லேடி சூப்பர்ஸ்டார் ஏகப்பட்ட பிசினஸ்களையும் ஆரம்பித்து அசத்தி வருகிறார்.

இதையும் படிங்க: திரிஷா அப்பவே இத பண்ணியிருந்தா பிரச்சனையே இல்ல!.. கேப்பில் கெடா வெட்டும் பயில்வான்!..

இந்நிலையில், புதிய தொடக்கம் என கேப்ஷன் கொடுத்து கேமரா வியூ பாயிண்ட்டரில் பார்க்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அடுத்து கணவர் விக்னேஷ் சிவனுக்கே வேட்டு வைத்து இயக்கத்திலும் களமிறங்க போகிறாரா நயன்தாரா எதைக் குறிப்பிடுகிறார் என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர். விரைவில், அதற்கான பதிலை அவரே சொல்வார் என தெரிகிறது.

 

Saranya M
Published by
Saranya M