×

90 கிட்ஸ் வயித்தெறிச்சல கொட்டிக்காதம்மா!..  காதலனுடன் ரொமாண்டிக் போஸ் கொடுத்து தெறிக்கவிட்ட  நயன்தாரா... 
 

 

போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் நானும் ரவுடிதான் படத்தை இயக்கி ஹிட் இயக்குனராக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். அந்த படத்தில் நடித்தபோது தான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்தனர்.

படம் வெளியாகி 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இவர்களது காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர் என்று பல வதந்திகள் வந்தாலும் அவர்கள் திருமணத்தை பற்றிய நல்ல செய்தி எதுவும் கூறாமல் ஜாலியாக இருந்து வருகிறார்கள்.

தற்போது அண்ணாத்தே படப்பிடிப்பில் நடந்து வந்த நயன், அங்கு கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் காதலனுடன் மீண்டும் ஜாலியாக ஊற் சுற்ற துவங்கியுள்ளார். நேற்று காதலனுடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படம் நேற்று வெளியானது. 

இந்நிலையில், குட்டைப்பாவாடையில் காதலன் விக்னேஷ் சிவனுடன் ரொமாண்டிக்காக போஸ் கொடுத்து நெட்டிசன்களின் வயித்தெறிச்சலை கிளப்பியுள்ளார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News