×

கிரிக்கெட் வீரர்களை காதலிக்காதீங்க... புலம்பும் நடிகை...
 

திருமணமான கிரிக்கெட் வீரர்களை காதலிக்க வேண்டாம் என நடிகை நீனா குப்தா கோரிக்கை விடுத்து இருக்கிறார்.
 
 
கிரிக்கெட் வீரர்களை காதலிக்காதீங்க... புலம்பும் நடிகை...

இந்தி சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நீனா குப்தா. காந்தி படத்தில் மகளாக நடித்து பலராலும் அறியப்பட்டவர். தொடர்ந்து இந்தி படங்களில் பிஸியாக நடித்தும், சில வெற்றிகரமான தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார். 61 வயதாகும் நீனா குப்தா, சமீபத்தில் பெண்களே திருமணமான ஆண்களை காதலிக்காதீர்கள் என தெரிவித்து வைரலாகி இருக்கிறார்.

நட்சத்திர கிரிக்கெட் ஜோடிகள் மத்தியில் காதலர்களாகவே பல வருடங்கள் முன்னர் புகழ்பெற்றவர்கள் நீனாவும், விவ் ரிச்சர்ட்சும். மேற்கிந்திய கிரிக்கெட் வீரரான ரிச்சர்ட்சை நீனா சில காலம் காதலித்து வந்தார். ஆனால், அவர் ஏற்கனவே கல்யாணம் ஆனவர் என்பதால் நீனாவுடன் திருமணம் நடக்கவில்லை. ஆனால் நீனா திருமணத்துக்கு முன்னரே, மசாபா குப்தா என்ற மகளை பெற்றெடுத்தார். அவர் பிரபல பேஷன் டிசைனராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான் நீனா திருமணமான கிரிக்கெட் வீரர்களை காதலிக்காதீர்கள். திருமணமாகாத எங்களுக்கு பிறந்த என் மகள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார். நானும் பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறேன். அதனால் தான் இதை கூறுகிறேன் எனத் தெரிவித்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News