தற்போது தமிழ் சினிமா உலகுக்கு வான்டட் இயக்குனராகி மாறிருக்கிறார் நெல்சன் திலீப்குமார். ஜெய்லர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கோலமாவு கோகிலா படத்தின் வெற்றி நெல்சன் கோலிவுட்டில் அடையாளப்படுத்திக் கொள்ள உதவியது.
இதையும் படிங்க : கர்வத்தில் எம்.எஸ்.வி செய்த செயல்… ஒரே பாடலால் கண்ணீர் விட வைத்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!
அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் படத்தினை இயக்கினார். கலாய், காமெடி என இருந்த சிவாவின் மறுபக்கமாக இந்த படம் அமைந்தது. நல்ல வசூலையும் பெற்றது. அடுத்து அவருக்கு வாய்ப்பு கொடுத்தவர் விஜய்.
பீஸ்ட் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் வெளியாகி பெரிய அளவில் ட்ரோல் மெட்ரியலாக மாறியது. வில்லனை வழுவாக காட்டாததே இந்த படத்தின் தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது. நெல்சன் கோலிவுட்டில் அதிகம் விமர்சிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: ‘ஜவான்’ போட்ட போடு.. இன்ஸ்டாவில் நுழைந்த ரகசியம்.. சும்மா ஆடுமா குடுமி?!…
இருந்தும் அவர் மீது ரஜினிகாந்துக்கு நம்பிக்கை வைத்து உருவான படம்தான் ஜெயிலர். ஜெயிலர் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று 600 கோடி வசூலை தாண்டிவிட்டது.தற்போது வெற்றியை கொண்டாடும் விதமாக கலாநிதி மாறன் நெல்சனுக்கு அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் தொகையையும் கொடுத்துவிட்டார்.
அது பெரும்பாலும் ஜெய்லர் இரண்டாம் பாகமாக தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் நெல்சன் அடுத்து ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க இருக்கும் தனுஷ் படத்தினை இயக்க இருக்கிறார். அதை முடித்துவிட்டு மீண்டும் சன் பிக்சர்ஸ் படத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தா. செ. ஞானவேல் இயக்கும் படத்தினை தொடர்ந்து ரஜினியை லோகேஷ் இயக்குவார். அந்த படங்களை தொடர்ந்து மீண்டும் நெல்சனுடன் ரஜினிகாந்த் இணையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…