கர்வத்தில் எம்.எஸ்.வி செய்த செயல்… ஒரே பாடலால் கண்ணீர் விட வைத்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!
கோலிவுட்டில் 60களில் புதுமுகங்கள் தான் அதிகம். வளர்ந்து வந்த தமிழ் சினிமாவிற்கு உதவியாக இருந்த முக்கியமானவர் எம்.எஸ். விஸ்வநாதன். ஆனால் அவரும் யோசிக்காமல் பட்டுக்கோட்டை கல்யணசுந்தரனாரையே ஒதுக்கி பின்னர் அதுக்கு கண்ணீரும் வடித்து இருக்கிறார்.
தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். திரைப்படங்களில் பாடல் எழுதும் எண்ணத்தில் வாய்ப்பு தேடி சென்னை வந்துள்ளார். முதல் வாய்ப்பாக படித்த பெண் என்ற படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் வெளியீடு தள்ளி போக கடைசியில் ரிலீசாகி தோல்வி அடைந்தது.
இதையும் படிங்க : தனுஷுக்கே அம்மாவா நடிச்சாச்சு! தளபதிக்கு நடிக்க மாட்டேனா? சினேகாவின் முடிவால் ஆச்சரியத்தில் கோலிவுட்
இந்த இடைவேளை நேரத்தில் 1955-ம் ஆண்டு வெளியான மகேஸ்வரி படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 5 பாடல்களை எழுதியிருந்தார். துரதிஷ்டவசமாக இந்த படமும் தோல்விப்படமாகவே அமைந்துவிடுகிறது. ஒரு அறிமுக கவிஞர் பாடல் எழுதிய 2 படங்களும் தோல்வியடைந்ததால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை.
ஒரே ஆறுதல் இந்த மகேஸ்வரி படத்தின் போது மாடர்ன் தியேட்டர் மேனேஜர் சுலைமான் என்பரின் பழக்கம் பட்டுக்கோட்டையாருக்கு கிடைக்கிறது. அந்த நேரத்தில் வாசவலை திரைப்படம் மாடர்ன் தியேட்டர் சார்பில் தயாரிக்கப்பட இருந்தது.
இந்த படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க இருந்தார். படத்தில் நாயகனாக எம்.கே.ராதா ஒரு மன்னர். மன்னனின் சகோதரன் ஒரு பெண் மீது வாஞ்சையுற்று தவறு செய்யும்போது மாட்டிக்கொள்கிறான். இதை மன்னரிடம் எடுத்து செல்ல அவர் நியாயம் கேட்கிறேன் எனச் சொன்னாலும் சகோதரன் தப்பித்து ஓடிவிட்டார்.
இதையும் படிங்க: அஜித் சொன்னதால்தான் வெங்கட் பிரபுவுடன் இணைந்தாரா விஜய்?.. தெய்வ வாக்கு தல!…
ஆனால், சகோதரனை தப்பிக்க வைத்ததே மன்னர் தான் என்று மக்கள் கோபமாகி விடுகின்றனர். இதனால் மன்னர் தனது பதவியை தூக்கி எறிந்துவிட்டு வனவாசம் சென்றுவிடுகிறார். காட்டில் பசிக்கும் குழந்தைகளுக்கு உணவு தேடி மன்னர் செல்கிறார். அப்போது அங்கு யானை வந்துவிடுவதால் , மன்னரின் மனைவி மற்றும் குழந்தைகள் தப்பிக்க நினைத்து வேறு பாதையில் சென்று தொலைந்து விடுகின்றனர்.
குடும்பத்தை தேடி களைத்த மன்னனுக்கு தாகம் எடுக்கிறது. திருடர்கள் பயத்தால் விஷம் கலந்த ஒரு குளத்தில் தண்ணீர் குடிக்கிறார். இதையடுத்து அவருக்கு மயக்கம் வருகிறது. விழுந்து கிடந்த அவரை ஆடுமேய்க்க வருபவர்கள் காப்பாற்றி விடுகின்றனர். இருந்துm அவருக்கு சித்த பிரம்மை பிடித்து விடுகிறது. ஓடிப்போன தம்பி வந்து மன்னிப்பு கேட்டாலும் அவரை அடையாளம் தெரியவில்லை.
இந்த சூழ்நிலைக்கு ஒரு பாடல் வருகிறது. இந்த பாடலுக்கு எம்.எஸ்.வி டியூன் தயாரான நிலையில் உடுமலை நாராயணன், மருதகாசி, கண்ணதாசன் இவர்கள் அனைவரும் எழுதிய எந்த பாடலும் பிடிக்கவில்லை எம்.எஸ்.விக்கு.
இதை பார்த்து கொண்டிருந்த சுலைமான் பட்டுக்கோட்டையாரிடம் இந்த கதையை சொல்லி பாடல் எழுத சொல்கிறார். அந்த பாடலை எடுத்துக்கொண்டு எம்.எஸ்.வியிடம் சுலைமான் காட்டுகிறார். அனுபவ கவிஞர்களே திணறும்போது புது பையன் என்ன செய்வான் என்று சொல்லி அந்த பாடலை பார்க்காமல் தவிர்த்து விடுகிறார்.
அடுத்த நாள் அனுபவ கவிஞர்கள் மீண்டும் பாடல் எழுதுகின்றனர். எந்த பாடலும் எம்.எஸ்.விக்கு செட்டாகவில்லை. மீண்டும் சுலைமான் பட்டுக்கோட்டையார் குறித்து சொல்ல எம்.எஸ்.வி. மீண்டும் தவிர்த்துவிடுகிறார்.
மூன்றாவது நாள் இதே தொடர்கதையாக எம்.எஸ்.வி திக்கு தெரியாமல் நிற்கிறார். மீண்டும் தன் நண்பனுக்காக சுலைமான் எம்.எஸ்.வியுடம் செல்கிறார். ஒரே திட்டுமழை. விரக்தியில் சுலைமான் கிளம்பும் போது பாடலை கொண்டுவா பாப்போம் என்று சொல்லி அந்த பாடல் வரிகளை படித்து பார்க்கிறார்.
அதை படித்து எம்.எஸ்.வி கண்ணீர் கொட்டுகிறது. எந்த சூழ்நிலைக்கு பாடல் கிடைக்காமல் டியூன் வராமல் திணறினாரோ அதற்கு இந்த பாட்டு கணகச்சிதமாக பொருந்தியது.
அந்த பாடல் உனக்கும் சொந்தம் எனக்கும் சொந்தம் உலகத்தற்கு எதுதான் சொந்தமடா. உடனே கடவுள் படத்துக்கு முன் நின்று கண்ணீர் விட்ட எம்.எஸ்.விஸ்வநாதன் எனக்கு இவ்வளவு கர்வத்தை கொடுத்துவிட்டியே.. ஒரு கவிஞர் பாடலை பார்க்காமல் 3 நாட்கள் அவரை காக்க வைத்துவிட்டேனே, ஏன் இந்த அளவுக்கு எனக்கு தலைகணத்தை கொடுத்தீர் என அழுதாராம்.
உடனடியாக இந்த பாடலுக்கு டியூன் போட்ட எம்.எஸ்.விஸ்வநாதன் ரெக்கார்டிங்கு அனுப்பிவிட்டு இந்த பாடலை எழுதிய பையனை கூட்டிகிட்டு வா என சுலைமானை அனுப்புகிறார். என்று சொல்கிறார். பட்டுக்கோட்டையாரை பார்த்த எம்.எஸ்.விக்கு பிடித்துவிடுகிறது. தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏவிஎம் வைத்த டாஸ்க்!.. அசால்ட் பண்ணிய எம்.எஸ்.வி.. ‘அந்த நாள் ஞாபகம்’ பாடல் உருவான கதை!..