ஆல்யா மானசா மாமியாருக்கு எதிராக கொதிக்கும் நெட்டிசன்கள்... இப்படியா பண்ணுவீங்க

சின்னத்திரையின் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆல்யா மானசா. இவரின் நடிப்புக்கும், குழந்தை வாய்ஸுக்கும் ரசிகர்கள் ஏராளம். நடன போட்டியாளராக இருந்தவர் விஜய் டிவி ராஜா ராணி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். சின்னய்யா சின்னய்யா என அவர் அழைத்தது பலராலும் கவரப்பட்டது. இதை தொடர்ந்து, அத்தொடரில் உடன் நடித்த நடிகர் சஞ்சீவ்வை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் சமீபத்தில் பிறந்து இருக்கிறார்.
பிரசவத்துக்கு பிறகு, மீண்டும் பழைய அழகுக்கு திரும்ப பல உடற்பயிற்சிகளில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து, ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில், அவரின் நடிப்புக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
#RajaRani யில்.. #VijayTelevision pic.twitter.com/MnCdH94IGi
— Vijay Television (@vijaytelevision) January 8, 2021
இந்நிலையில், இத்தொடரின் லேட்டஸ்ட் ப்ரோமோவை பார்த்து கடுப்பில் இருக்கின்றனர். அதில், வாக்கு போட்டு வந்த மருமகளுக்கு மாமியார் தண்டனை கொடுப்பது போல அமைந்து இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் தேர்தல் ஆணையத்திற்கு டேக் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே சீரியல்களால் கடுப்பில் இருக்கும் ஆண்மகன்கள் பலர் இதெல்லாம் சீரியலா, வோட்டு போடுறது தப்பா என வரிந்துக் கட்டிக்கொண்டு வசைப்பாடி வருகின்றனர். அதிலும், சிலர் கமல்ஹாசனை கூட டேக் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.