×

மரண பங்கம்!.. இனிமே போட்டோ போடுவியா?...‘குக் வித் கோமாளி’ நடிகையை வச்சு செய்யும் நெட்டிசன்கள்.....

 
pavithra

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் பவித்ர லட்சுமி. இந்நிகழ்ச்சியில் இவருக்கென ரசிகர்கள் உருவாகினர். இந்நிகழ்ச்சிக்கு பின் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில், Take me Up (என்னை மேலே தூக்கு) என பதிவிட்டு ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘தூக்கணுமா இரு வரோம்’ என கிளம்பி அவரை தூக்குவது போல் பல புகைப்படங்களில் அவரை மார்பிங் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

pavithra

அதிலும், பாகுபலி படத்தில் பிரபாஸ் சிவலிங்கத்திற்கு பதில் அவரை தூக்குவது போலவும், ஆம்பள படத்தில் பறக்கும் ஜீப்பில் விஷாலுக்கு பதில் பவித்ரா அமர்ந்திருப்பது போலவும், விஜய் தோளின் மீது அமர்ந்திருப்பது போலவும், வடிவேல் அவரை தூக்கி போஸ் கொடுப்பது போலவும் செய்து அவரை பங்கம் செய்து வருகின்றனர்.

pavithra

மேலும் கிங்காங் குரங்கு, ராக்கெட், ஈபிள் டவர் உள்ளிட்ட பலவற்றின் மீது அவர் அமர்ந்திருப்பது போல் மார்பிங் செய்து கலாய்த்து வருகின்றனர்.  

ஏற்கனவே, மாஸ்டர் படம் வெளியான போது அப்படத்தில் மாளவிகா மோகனன் சீரியஸாக பேசும் ஒரு காட்சியை பங்கம் செய்து ட்ரோல் செய்தனர். தற்போது அவர்களிடம் பவித்ர லட்சுமியும் சிக்கிவிட்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News