×

இந்த உலகத்திலேயே என்ன மாதிரி சிறந்த நடிகை உண்டா... சோசியல் மீடியாவில் பல்பு வாங்கும் பிரபலம்

தலைவி படத்தில் நடித்திருக்கும் கங்கனா ரணாவத் உலகத்திலேயே தன்னைப்போல் சிறந்த நடிகை ஒருவர் உண்டா என சுயதம்பட்டம் அடித்திருக்கிறார். 
 

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை ஒட்டி எடுக்கப்பட்டிருக்கும் தலைவி படத்தில் கங்கனா நடித்திருக்கிறார். இயல்பிலேயே மிகவும் ஒல்லியாக இருக்கும் அவர், ஜெயலலிதா கதாபாத்திரத்துக்காக சதை போட்டிருந்தார். பின்னர், உடல் எடையைக் குறைத்து தகாத் என்ற ஆக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். 
இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் கங்கனா, ``உலகிலேயே என்னைப் போன்று திறமையும் அறிவுத் திறனும் கொண்ட நடிகை யாராவது இருக்கிறார்களா என்ற விவாதத்துக்கு நான் தயாராக இருக்கிறேன். அப்படி நிரூபித்துவிட்டால் எனது ஆணவத்தை நான் விட்டுவிடுகிறேன். அதுவரை நான் பெருமைகொள்வேன்’’ என்று  பதிவிட்டிருக்கிறார். மேலும், ``தலைவி மற்றும் தகாத் படங்களுக்காக எனது உடல் எடையை வெகுவாக ஏற்றி குறைத்திருக்கிறேன். ஹாலிவுட்டின் மெரீல் ஸ்டீரீப் போன்ற நடிப்பையும் கேல் கேடாட் போன்ற கிளாமரும் எனக்கு இருக்கின்றன’’ என்றும் ட்வீட்டவே, அதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News