×

ஓடிடி தளம் தொடங்கும் இயக்குனர்... எதனால் இந்த முடிவு?
 

தமிழில் ஓடிடி தளம் தொடங்கும் முடிவில் இருக்கிறாராம் டி.ராஜேந்தர். 
 
ஓடிடி தளம் தொடங்கும் இயக்குனர்... எதனால் இந்த முடிவு?

நடிகரும் இயக்குனருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடித்திருக்கும் `தண்ணி வண்டி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய டி.ராஜேந்தர், ``ஓடிடி தளம் என்பது காலத்தின் கட்டாயம். சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி. அதனால். நானும் ஓடிடி தளம் தொடங்கும் முடிவில் இருக்கிறேன். 

அதன்மூலம் சிறிய தயாரிப்பாளர்களுக்கும், புதிய இயக்குனர்களுக்கும், போராடும் படைப்பாளிகளுக்கும் அப்படி ஒரு தளம் தேவை. அதை நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறோம். தியேட்டர்களில் கட்டணம் அதிகம். அதைக் குறைப்பது பற்றி யாரும் பேசுவதில்லை. தியேட்டர்களில் டிக்கெட் ரூ.150 என்றிருந்தால் எப்படி ஏழை ஒருவர் குடும்பத்தோடு படம் பார்க்க முடியும். அத்தோடு பாப்கார்ன் 150 ரூபாய் என்கிறார்கள். இதையெல்லாம் எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். ஆந்திராவிலும் படம் ஓடுகிறது. அங்கெல்லாம் தியேட்டர் டிக்கெட் 70, 80 ரூபாய் என்றுதான் இருக்கிறது’’ என்று பேசினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News