×

அரசு அதிகாரியை செருப்பால் அடுத்த டிக்டாக் பிரபலம் - நடிகை கஸ்தூரி ஆதரவு!

ஹரியான மாநில பாஜக உறுப்பினரான சோனாலி போகட் டிக்டாக்கில் வித விதமான வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களையே பெரும் பிரபலமானவர்.  

 

இந்நிலையில்  சோனாலி போகட் உழவர் சந்தைக்கு சென்று அப்பகுதி விவசாயிகளுடன் பார்வையிட்டு மக்கள் அளித்த புகார்களை எடுத்துக்கொண்டு வேளாண் உற்பத்தி சந்தை குழுவின் உறுப்பினர் சுல்தான் சிங்கை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின் போது மக்களின் புகார்களை எடுத்து கூறிய சோனாலியை அந்த அதிகாரி தவறான வார்த்தையால் திட்டியிருக்கிறார்.

பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற சோனாலி சுல்தான் சிங்கை அந்த இடத்தில் வைத்தே  செருப்பால் சரமாரியாக அடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில்,  "சோனாலி போகட்டை அந்த அரசு அதிகாரி துஷ்பிரயோகம் செய்தபோது போலீசார் நடவடிக்கை எடுத்தார்களா? சட்டத்தின் வழியில் தண்டனை கொடுக்கவேண்டும் என்றல் சோனாலி  என்னைப் போலவும், மற்ற பெண்களை போலவும் நீதிக்காக காத்திருக்க வேண்டியதுதான். எனவே அவர் அங்கேயே தண்டித்தது தான் சிறந்த தண்டனை என கருத்து  தெரிவித்துள்ளார்

From around the web

Trending Videos

Tamilnadu News