Categories: Cinema News latest news

நித்யா மேனன் எக்ஸ் காதலர்களை பார்க்கணுமா?.. அவங்களே இப்படி ஓப்பனா வெளியிட்டா எப்படி பாஸ்?..

31 வயதாகும் நடிகை நித்யா மேனன் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய எக்ஸ் காதலர்களை பார்க்க வேண்டுமா என்பது போல் அவர் வெளியிட்டுள்ள போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சித்தார்த் நடிப்பில் வெளியான 180 திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நித்யா மேனன். பெங்களூரில் பிறந்து வளர்ந்த நித்யா மேனன் தமிழுக்கு வருவதற்கு முன்னதாக ஆங்கிலம், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இதையும் படிங்க: சொல்லி அடிச்ச கில்லி!. குறிப்பிட்ட மாதத்தில் வெளியான எம்.ஜி.ஆரின் 12 மெகா ஹிட் படங்கள்!..

வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை, ஓ காதல் கண்மணி, 24, முடிஞ்சா இவன புடி, இருமுகன், சைக்கோ, மெர்சல் மற்றும் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

திறமையான நடிகையாக பார்க்கப்படும் நித்யா மேனன் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழ்ல அவர் நடித்த ஒவ்வொரு படமும் வித்தியாசமான படங்கள்தான் அவரது கதாபாத்திரம் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்து விடும்.

இதையும் படிங்க: நயன்தாரா புடவையெல்லாம் இவ்வளவு கம்மி விலையா?!.. சீரியல் நடிகை செய்த செம ஷாப்பிங் வீடியோ..

இந்நிலையில் அடுத்ததாக, ’டியர் எக்சஸ்’ எனும் படத்தில் நடிக்கவுள்ள நித்யா மேனன் தனது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அந்த படத்தின் போஸ்டர் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.

ஒரு கையில் எக்ஸ் போன் செய்வது போடவும் இன்னொரு கையில் சரக்கு கிளாஸ் வைத்திருப்பது போலவும் போஸ் கொடுத்து மாஸ்க் காட்டுகிறார். இந்தப் படத்தை காமினி என்பவர் இயக்குகிறார்.

இதையும் படிங்க: சர்ச்சை இயக்குனரின் மூக்கை உடைத்த கௌதம் வாசுதேவ் மேனன்… என்ன சொல்லி இருக்கார் பாருங்க?

Saranya M
Published by
Saranya M