Connect with us

Bigg Boss

உன் உதடு இருக்கே அவ்வளவோ அழகு.. ஆயிஷாவிடம் அத்துமீறும் நிக்சன்..! அடேய் இது தமிழ் பிக்பாஸுடா..!

Biggboss Tamil: தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசனுக்கு சீசன் மாறாமல் இருக்கும் ஒரு விஷயத்தில் இந்த லவ் கண்டெண்ட் அடங்கும். அப்படி இந்த சீசனில் அந்த விஷயத்தினை எல்லை மீறி எடுத்து செல்வதாக ரசிகர்களுக்கு எரிச்சலை தரும் விஷயமாகவே மாறிவிட்டது.

கடந்த சீசனில் முதல் சில வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டவர் அசல் கோளாறு. அவர் சக பெண் போட்டியாளர்களிடம் உரசிக்கொண்டே இருந்தே வைரலாக பேசப்பட்டவர். பின்னர் வெளியேற்றப்பட்டார். இந்த சீசனில் முதல் இரண்டு வாரம் ஃபைனலிஸ்ட்டாக பேசப்பட்டவர் ராப் பாடகர் நிக்சன். ஆனா விதி யாரை விட்டுச்சு. 

இதையும் படிங்க: கார்த்திக்கின் நட்புக்காக நெப்போலியன் செஞ்ச அந்த காரியம்!. அட இது வேற வேற லெவல்!..

கடந்த வாரம் முழுவதும் ஆயிஷாவிடம் வழிந்து கொண்டு இருந்தார். அதில் அந்த கண்ணாடிக்கு நடுவில் அவர்கள் முத்தக்காட்சி வைரலானது. ரசிகர்களும் இது எல்லா சீசனிலும் நடக்கும் கருமம் தானே. செஞ்சிட்டு போங்க என விட்டுவிட்டனர். நேற்று வீட்டுக்குள் வந்த ஐந்து வைல்ட் கார்டு போட்டியாளர்கள் இந்த பிரச்னையை பேசிக்கொண்டே இருந்தனர்.

ஆயிஷா தடம் மாறுவதாக கூறினர். இதனால் மணியை அழைத்து நிக்சன் தன்னிடம் காதலை சொன்னதாக விஷயத்தினை உடைத்தார். இது பார்த்த ரசிகர்களுக்கே ஷாக் ஆனது.  இதில் வெளியில் காதலனை வைத்திருக்கும் விஷயமும் கசிய என்னங்கடா இது என்ற ரீதியில் கொதித்து எழுந்தனர்.

தொடர்ச்சியாக நிக்சனை அழைத்து பேசிய ஆயிஷா இது சரியாக தோன்றவில்லை. நம்ம பேச வேண்டாம் என்பதை பூசி மொழுகி சொல்ல ஆனால் நிக்சனோ ஸ்டைல் காட்றேன் பேர்வழி என்ற பெயரில் அசால்ட்டாக டீல் செய்தார். பின்னர் பேசிவிட்டு அவருக்கு ஒரு கட்டிப்பிடி கொடுக்க அது ஆயிஷாவுக்கே அசெளகரியமாக இருந்தது.

இதையும் படிங்க: ஜப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் டிடி பார்த்த வேலை! கடுப்பாகி உட்கார்ந்த கார்த்தி

அவரை கையில் சுமந்து கொண்டு நடந்ததும், அதை பிடிக்காமலும் போட்டிக்காக ஏற்றுக்கொண்டது போன்ற முகத்துடனே அம்மணி சுற்றினார். இதில் ஒருமுறை ஆயிஷாவை தொட்டு தொட்டு நிக்சன் வழிந்ததை கண் கொடுத்து பார்க்க முடியாமல் போனது.

அதிலும் உன் உதடுகள் அழகா இருக்கு. நீ அழகு என்ற காதல் வசனங்கள் கண்டிப்பாக சகிக்க முடியவில்லை தான். ஆயிஷாவின் அண்ணனான அமீரும், பாவனியை காதலித்தார். அதில் ஒரு கண்ணியம் இருந்தது. இது பார்க்கவே முடியவில்லை என ரசிகர்கள் கடுப்பாகி இருக்கின்றனர். 

 

வைரலாகும் அந்த வீடியோவைக் காண: https://twitter.com/dongryravai/status/1718954304512610362

Continue Reading

More in Bigg Boss

To Top