kanguva
Kanguva: கோலிவுட்டில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த சலசலப்பு இன்னும் குறையவில்லை. தொடர்ந்து இன்னும் தேதியும் முடிவாகாத நிலையில் படக்குழு ஒரு விஷயத்தை மட்டும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் நடிகர் சூர்யா வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் கடைசியாக கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கேமியோ ரோலில் மட்டுமே எடுத்திருந்தார். அதை தொடர்ந்து இரண்டு வருடங்களாக அவர் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: வேண்டாம் வந்துராதீங்க.. ரொம்ப கஷ்டப்பட்டு வெளியில வந்தோம்… கண்ணீர்விடும் விஜய் ரசிகர்கள்
தற்போது ஸ்டூடியோ கிரீன்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து கடைசி கட்ட ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் சில விஎஃப்எக்ஸ் காட்சிகளின் வேலைகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
முதலில் திரைப்படத்தை அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வர படக்குழு முடிவு எடுத்திருந்தது. ஆனால் அப்படம் அது குறித்து அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அக்டோபர் 10 என முடிவெடுத்து லைக்கா நிறுவனம் வெளியிட்டு விட்டது.
இதையும் படிங்க: விஜய் மேல் மகனுக்கும், மகளுக்கும் அப்படி என்ன கோபம்? குடைந்து எடுக்கும் பயில்வான்
இதனால் கங்குவா திரைப்படம் பின்வாங்கியது. இது குறித்து மெய்யழகன் ஆடியோ வெளியீட்டு விழா மேடையிலேயே நடிகர் சூர்யா நான் பிறக்கும் போதே கோலிவுட்டில் உச்சத்தில் இருந்தவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் படம் தான் அன்று வெளியிட வேண்டும்.
கங்குவா இன்னொரு நாள் வெளியாகும் என தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து திரைப்படத்தை தீபாவளி தினத்தில் வெளியிடலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது அன்றைய நாளிலும் படம் வெளியாகாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் சிவகார்த்திகேயனின் அமரன், நெல்சன் தயாரிப்பில் ப்ளடி பெக்கர், ஜெயம் ரவியின் பிரதர் உள்ளிட்ட திரைப்படங்கள் அன்றைய நாள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு விட்டது.
kanguva
மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள கங்குவா திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியிடப்பட்டால் நிறைய திரையரங்குகள் கிடைக்காது. இதனால் படத்தை தனியாகவே வெளியிடப்பட முடிவு எடுத்திருக்கிறது.
இதனால் பண்டிகை நாள் இல்லாமல் நவம்பர் இரண்டாவது வாரத்தில் இப்படம் வெளியாகவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தற்போது கசிந்து வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…