Categories: Cinema News latest news

7 மணி காட்சிக்கு ஏழரை தான்!.. கடைசி வரை லியோவுக்கு அனுமதியே கிடைக்கல.. தளபதி கணக்கு தப்பா போச்சே!..

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கே ரிலீஸ் ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 9 மணிக்குத்தான் லியோ படத்தின் முதல் காட்சி வெளியாகும் என்பது உறுதியாகி உள்ளது.

கடைசி வரை முட்டி மோதி எப்படியாவது ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலை முந்தி விட வேண்டும் என நினைத்த நடிகர் விஜய்க்கும் லியோ படக்குழுவுக்கும் ஆப்பு அடித்து விட்டது போல 9 மணிக்குத்தான் முதல் காட்சி என்பதில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: லியோ படத்தின் முதல் விமர்சனத்தை சொன்ன உதயநிதி.. கூடவே அந்த கட்டுச்சோத்தையும் அவுத்துட்டாரே?..

கடலிலேயே இல்லையாம் என்பது போல காலை 7 மணிக்கு கூட ஷோ கொடுக்க முடியாது என்பதை திட்டவட்டமாக சொல்லி விட்ட நிலையில், அனைத்து தியேட்டர்களும் டிக்கெட் புக்கிங்கை இன்று தொடங்கும் என தெரிகிறது.

ஏற்கனவே நள்ளிரவில் ஏஜிஎஸ் சினிமாஸ், மாயாஜால் உள்ளிட்ட பல பிரபல திரையரங்குகள் டிக்கெட் முன் பதிவை தொடங்கி சில நிமிடங்களிலேயே ஒட்டுமொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜிடம் ரஜினி கேட்ட முதல் கேள்வி!.. அட இவ்வளவு நடந்திருக்கா?!..

கோயம்பேடு ரோகிணி தியேட்டர் உள்ளிட்ட பல பிரபல திரையரங்குகள் இன்னமும் டிக்கெட் புக்கிங்கை ஆரம்பிக்காமல் உள்ள நிலையில், இன்று காலை அனைத்து திரையரங்குகளும் டிக்கெட் முன் பதிவை தொடங்கி விடும் என்றே தெரிகிறது.

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் 850 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் அஜித் நடித்த வலிமை திரைப்படம் 950 தியேட்டர்களில் வெளியான நிலையில், வலிமை படத்தின் முதல் நாள் வசூலை லியோ படத்தால் முறியடிக்க முடியாது என்றும் பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால், உலகளவில் லியோ படத்துக்கு இருக்கும் கிரேஸ் மற்றும் பல இடங்களில் ரெக்கார்டு புக்கிங் நடைபெற்றுள்ள நிலையில், உலகளவில் முதல் நாள் வசூலில் இதுவரை தமிழ் சினிமா படைக்காத புதிய உச்சத்தை லியோ தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Saranya M
Published by
Saranya M