லியோ படத்தின் முதல் விமர்சனத்தை சொன்ன உதயநிதி.. கூடவே அந்த கட்டுச்சோத்தையும் அவுத்துட்டாரே?..

by Saranya M |
லியோ படத்தின் முதல் விமர்சனத்தை சொன்ன உதயநிதி.. கூடவே அந்த கட்டுச்சோத்தையும் அவுத்துட்டாரே?..
X

நடிகர் விஜய்யின் லியோ பட பிரச்சனைகளுக்கு எல்லாம் உதயநிதி ஸ்டாலினும் அவருடைய ரெட் ஜெயண்ட் நிறுவனமும் தான் காரணம் என விஜய் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்க, திடீரென எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல அதிரடியாக வெள்ளைக் கொடியை நீட்டியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

தளபதி என முதலமைச்சர் ஸ்டாலினை அவரது தொண்டர்கள் கொண்டாடி வந்தாலும், தமிழ் சினிமாவில் தளபதி என நடிகர் விஜய்யை தான் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட்டில் தளபதி விஜய் அண்ணா என குறிப்பிட்டு ரசிகர்களை உச்சி குளிர செய்து விட்டார்.

இதையும் படிங்க: மியூசிக் மனைவியை சொகுசா வச்சிக்கிறதே அந்த காமெடி ஹீரோ தானா?.. ஆத்தி எப்படியெல்லாம் கிளம்புது!..

மேலும், நாளை வெளியாக உள்ள லியோ திரைப்படத்தை பார்த்து விட்ட நிலையில், அந்த படத்திற்கான முதல் விமர்சனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

நடிகர் விஜய்யை வைத்து குருவி படத்தை தயாரித்து சினிமா தயாரிப்பாளராக அறிமுகமானவர் தான் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஆதரவான கருத்துக்களையே கூறி வரும் உதயநிதி ஸ்டாலின் சமீப காலமாக ஆட்சி அதிகாரம் மற்றும் விஜய்யின் அரசியல் வருகை காரணமாக அவருக்கு எதிராக செயல்படுகிறார் என்றும் லியோ படத்தின் தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு கொடுக்காததால் குடைச்சல் கொடுக்கிறார் என விஜய் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென, தளபதி விஜய் அண்ணாவின் லியோ படம் சூப்பர் என தம்ப்ஸ் அப் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கள்ள உறவு காரணமில்லை!.. விவாகரத்து பஞ்சாயத்து.. டி. இமான் என்ன சொல்லியிருக்காரு பாருங்க!..

மேலும், லோகேஷ் கனகராஜின் இயக்கம் பிரம்மாதம், அனிருத் இசை அதிரடி, ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவ் சிறப்பான செய்கை என பதிவிட்டு தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

கடைசியாக, கூட்டத்தில் கட்டுச்சோத்தை அவிழ்ப்பது போல, LCU ஹாஷ்டேக்கை போட்டு லியோ திரைப்படம் எல்சியூ தான் என்பதை அம்பலப்படுத்தி விட்டார். லோகேஷ் கனகராஜ் கடைசி வரை கட்டிக் காப்பாத்தி வந்த ரகசியத்தை இப்படி போட்டு உடைத்து விட்டாரே உதயநிதி.

Next Story