Connect with us
rajini ajith

Cinema News

அஜீத்தும் அப்படித்தான்!.. ஆனா விஜயை மட்டும் கார்னர் செய்யும் ரஜினி.. இது தப்பு தலைவரே!..

சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் அஜித்தும் தான் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசை பட்டார் என்று வலைப்பேச்சு பிஸ்மி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

அந்த பேட்டியில் நடிகர் ரஜினியும், விஜயும் தான் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அஜித் எனக்கு எந்த பட்டமும் வேண்டாம். ரசிகர் மன்றம் வேண்டாம், போஸ்டர் அடிக்க வேண்டாம் என்று எந்த ஆசையும் இல்லமல் இருக்கிறார் என்று நிருபர் தெரிவித்தார். அதனை மறுத்த பிஸ்மி, எந்த பட்டமும் வேண்டாம் என்று அவர் சொல்லவில்லை. 

இதையும் படிங்க- ஒரே ஒரு தப்பான முடிவு.. டோட்டல் சினிமா வாழ்க்கையும் குளோஸ்.. இருந்த இடம் தெரியாமல் போன தமிழ் ஹீரோயின்கள்!!

அதேபோல சூப்பர் பட்டத்தின் மீது அவருக்கு ஆசை இல்லாமலும் இல்லை. ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசை பட்டவர் தான் அஜித். அடுத்த சூப்பர் ஸ்டார் நானாக இருந்தால் என்ற என்று ஒரு முறை அவர் கேள்வி கேட்டிருக்கிறார்.

அந்த காலத்தில் அஜித் ஒரு பேட்டி கொடுத்தால், முழுவதும் சர்ச்சையாக தான் இருக்கும். யாரை பற்றி கேள்வி கேட்டாலும் சகட்டு மேனிக்கு அவர் வாயில் இருந்து கமெண்ட் வரும். பயங்கரமா லூஸ் டாக் விடுவார் அஜித். மறைமுகமாக இருந்த விஜய் அஜித் போட்டி, நேரடி தகராராக மாறியதே அஜித் கொடுத்த பேட்டிகளால் தான், ரொம்ப ஓப்பனா, கடுமையா பேசுவார். 

அதேபோல, அட்டகாசம் படத்தில் வரும் ‘இமய மலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன’ என்ற பாடல் கூட விஜயை நேரடியாக தாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வைத்தது தான். பாடல் முழுவதும் உனக்கென்ன உனக்கென்ன என்று விஜயை தான் கூறியிருப்பார். 

அதன் பிறகு தான் அஜித் ரியாலிட்டியை புரிந்துகொண்டார். இந்த பட்டம், பேர் எல்லாம் ஒன்றுமே இல்லை என்ற பக்குவம் வந்துவிட்டது. இப்போது எதுவுமே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறார். ஆனாலும் அவரது ரசிகர்கள் அவரை கொண்டாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்று பிஸ்மி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க- டேய் நான் சொன்னதே வேறடா!. போதும் நிறுத்துங்கடா!.. தலையில் அடித்து புலம்பும் மாரி செல்வராஜ்!…

 

author avatar
prabhanjani
Continue Reading

More in Cinema News

To Top