Categories: Cinema News latest news

இந்த வாரம் செம வேட்டை தான் போல… அண்ணன் வரார் வழி விடு.. இந்த வார ஓடிடி அப்டேட்..!

OTT Release: தமிழ் சினிமா ரசிகர்கள் இப்போதெல்லாம் தியேட்டர் ரிலீஸை எதிர்பார்ப்பதை விட ஓடிடியில் இந்த வாரம் என்ன படம் ரிலீஸ் ஆகும். வீக் எண்ட்டில் பார்த்து எஞ்சாய் செய்யலாம் என்றே எதிர்பார்க்கின்றனர். அப்படி இருப்பவர்களுக்கு இந்த வாரம் செம ட்ரீட் காத்திருக்கு.

விஜய் நடிப்பில் கடந்த ஆயுதபூஜை தினத்தில் வெளியாகி இருந்தது லியோ திரைப்படம். மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்த லியோ படம் ஒரு வழியாக ஓடிடி பக்கம் வந்து விட்டது. இன்று நெட்ப்ளிக்ஸில் வெளியாகும் இப்படம் ஐம்டிபியில் 7.7 ரேட்டிங் வாங்கி இருக்கிறது.

இதையும் படிங்க: அந்த நடிகையை மன்சூர் பேசியபோது சிரிச்சீங்க!. இப்ப மட்டும் கோபம் ஏன்?.. வெளுத்து வாங்கும் பத்திரிக்கையாளர்.

ஆர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் தி வில்லேஜ் வெப் சீரிஸ். திரில்லர் ஜானலரில் உருவாகி இருக்கும் இந்த சீரிஸ் கண்டிப்பாக வீக் எண்ட் டைம் பாஸுக்கு உதவும். ஆனால் சீரிஸ் கலவையான விமர்சனங்களை பெற்று இருப்பது முக்கியமான சேதி.

ப்ரேம்ஜி நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் சத்ய சோதனை. காமெடி படம் என்பதால் வயிறு குலுங்க சிரிக்கலாம். ஐஎம்டிபியில் 9.2 ரேட்டிங் வாங்கி இருப்பதால் எண்டர்டெயின்மெண்ட் கியாரண்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தனுஷை யாரென தெரியாத மக்கள்..! பாஷையே தெரியாமல் ஆட்டம் போட்டு கலக்கிய தனுஷ்… சுள்ளான் சூப்பருப்பா..!

இதுமட்டுமல்லாமல் ஆஹா தளத்தில் டிமோன் திரைப்படம் ரிலீஸாக இருக்கிறது. அடுத்து 28ந் தேதி சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா ஹாட்ஸ்டாரில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் சித்தா வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில் அது தள்ளி போனது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily