×

ஒரு பக்கம் வருமான வரிச்சோதனை.. மறுபக்கம் டிரெண்டிங்.....விஜய் எப்பவும் மாஸ்தான்

நடிகர் விஜய் படப்பிடிப்பு மற்றும் அவரது வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

நெய்வேலி என்.எல்.சி. யில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயிடம் இன்று மாலை திடீரென வருமானத்துறையினர் விசாரணை நடத்தினர். அதன்பின் அவரை சென்னைக்கு அழைத்து வந்து சாலிகிராமம், நீலாங்கரையை தொடர்ந்து விஜய்யின் மற்றொரு வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

அதன்பின், கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்..அதேபோல், பிகில்  தயாரிப்பாளர் அலுவலகம் மற்றும் வீடுகளின் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதைத்தொடர்ந்து #WeStandWithVijay என்கிற ஹேஷ்டேக் மூலம் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஹேஷ் தற்போது டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News