×

உன் வேலைய மட்டும் பாரு... லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா பளார் ரிப்ளை!

வனிதாவின் மறுமணம் குறித்து சொல்வதெல்லாம் உண்மை புகழ் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், "நான் இப்பொழுது தான் இந்த செய்தியை பார்த்தேன். அந்த நபருக்கு ஏற்கனவே கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இன்னும் விவாகரத்து ஆகவில்லை. படிப்பும், புகழ் வெளிச்சம் உள்ளவர் எப்படி இதுபோன்ற ஒரு தவறை செய்ய முடியும் ? அதிர்ச்சியடைந்தேன். வனிதா மற்றும் பீட்டர் பாலின் திருமணம் முடியும் வரை அவர் ஏன் காத்திருந்தார். ஏன் திருமணத்தை நிறுத்தவில்லை ? என்று கேள்வி எழுப்பி இரண்டு தரப்பிலும் உள்ள குற்றத்தை குறித்து ட்விட் போட்டிருந்தார்.

 

இதற்கு கடுப்பாகி பதிலளித்த வனிதா, "உங்களுடைய ட்வீட்களை நீக்குங்கள். உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். நீங்கள் ஒன்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலோ குடும்பத்தைக் கெடுக்கும் உங்களுடைய நிகழ்ச்சியிலோ இல்லை. நான் நன்குப் படித்தவர். சட்டரீதியான அறிவு கொண்டவர். யாருடைய ஆதரவின்றியும் என் வாழ்க்கையை என்னால் பார்த்துக்கொள்ள முடியும். என்னுடைய முடிவுகளுக்கு உங்களுடைய ஆதரவோ அங்கீகாரமோ எனக்கு அவசியம் கிடையாது. இந்தப் பிரச்னையிலிருந்து தள்ளி இருங்கள். இது பொதுப் பிரச்னையோ உங்கள் நிகழ்ச்சியோ கிடையாது என்றார் வனிதா.

வனிதாவின் இந்த பதிலுக்கு ரிப்ளை செய்த லட்சுமி ராமகிருஷ்ணன், "முறைப்படி விவாகரத்து பெறாமல் நடைபெறும் மறுமணங்களைக் குறித்த என் கருத்தை வெளிப்படுத்தினேன். கற்பழிப்பு, சமீபத்திய தந்தை - மகன் மரணம் குறித்து நான் கருத்தை வெளிப்படுத்தும்போது இத்தனை எதிர்வினைகள் பதில் எனக்கு கிடைக்கவில்லை என்றார்.

அதே சமயம் உங்களுடைய தேர்வு குறித்து நான் கேள்வி எழுப்பவில்லை. ஒருவர் சமூக நடைமுறையை, சட்டத்தை மீறும்போது சமூகமும் நானும் அந்த முடிவை தட்டி கேட்கிறோம். சட்டத்தை மீறி விவாகரத்து பெறாமல் நடைபெறும் மறுமணம் என்கிற அந்த முடிவை மட்டுமே கேட்டோம் என்றார். இந்த விவகாரம் தற்ப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News