×

சக்ரா படத்திற்கு நோ சொன்ன ஓடிடி... இதான் காரணமா... 

விஷால் நடிப்பில் வெளிவர இருக்கும் சக்ரா படத்தை ஓடிடியே வேண்டாம் எனச் சொல்லியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
 
 

எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சக்ரா. விஷாலுடன் ஸ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். முதலில் படத்தை ஓடிடியில் தான் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. அந்த சமயத்தில் தான் கொரோனா சிக்கல் முடிந்து திரையரங்கில் வெளியான மாஸ்டர் படம் பெரும் வசூலை அள்ளி குவித்தது. இதனால், படக்குழு தங்கள் முடிவை மாற்றிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் அது மட்டும் சரியான காரணம் இல்லையாம். 

தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் தனது முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களும் அதற்குரிய வட்டியை வசூலித்து தருமாறு புகார்கள் வைக்கப்பட்டு இருக்கிறதாம். தொடர்ந்து, விஷாலின் மீதும் வழக்கு போடப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சமயத்தில் தான் விஷாலின் சக்ரா படம் ஓடிடியில் வெளியிட ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டு விட்டதாம். ஆனால், சக்ராவை வாங்கினால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டும் என ஓடிடி நிறுவனத்துக்கு தகவல்கள் போக அவர்கள் தான் வேண்டாம் என ஒதுங்கினார்களாம். 

இதனால் தான் சக்ரா சென்சாருக்கு சென்று தற்போது திரையரங்குகளில் பிப்ரவரி 19 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News