×

ப்பா யார்ரா இந்த பொண்ணு… குறும்படம் இயக்கி தங்க பதக்கம் வென்ற நடிகை!

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமான காயத்ரி ஷங்கர் தான் இயக்கிய குறும்படத்துக்காக தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

 

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமான காயத்ரி ஷங்கர் தான் இயக்கிய குறும்படத்துக்காக தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

நடிகர் காயத்ரி ஷங்கர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி மற்றும் சீதக்காதி ஆகிய படங்களில் நடித்தவர். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து இப்போது அவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். ஆனால் திரைப்படங்கள் இல்லை. குறும்படங்களை இயக்கி வருகிறார். அவர் இயக்கிய ரோட் டு தும்பா (road to thumba) எனும் குறும்படம், இந்தியன் பில்ம் பிராஜெக்ட்டில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. இதை அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்த விருது தந்த மகிழ்ச்சியால் அவர் இப்போது அடுத்த குறும்படத்தையும் இயக்கி விருது விழாக்களுக்கு அனுப்ப முயற்சி செய்துகொண்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News