Connect with us

Cinema News

சிவகார்த்திகேயன் துரோகம் செஞ்சதா சொன்ன டி. இமான்.. இப்போ அடுத்து யாருடன் கைகோர்த்துள்ளார் தெரியுமா?..

இரவின் நிழல் படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த நிலையில், தனது அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டதாக புலம்பிக் கொண்டிருந்த டி. இமானின் புலம்பலை பார்த்து பார்த்திபன் புதிய படத்தில் பணியாற்ற வாங்க என அழைத்ததும் அடித்தது ஜாக்பாட், கிடைத்தது சான்ஸ் என பொட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு பார்த்திபன் உடன் வந்து விட்டார் டி. இமான் என ரசிகர்கள் இந்த அறிவிப்பை பார்த்து கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கண்ட்ரோல் இருக்கவங்க மட்டும் பாருங்க!.. பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் சிம்பு பட நடிகை…

சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்திற்கு பிறகு அவருடன் இணைந்து பணியாற்றவில்லை என்றும் தொடர்ந்து ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்து வரும் டி. இமானுக்கு பட வாய்ப்பு கிடைக்காதது எல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாது என்றும் விஸ்வாசம், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், கழுவேர்த்தி மூர்க்கன் என பல படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் இமான் வாழ்க்கையில் சிவகார்த்திகேயன் வேறு வகையில் தான் விளையாடி இருக்கிறார் என நெட்டிசன்கள் மீண்டும் கழுவி ஊற்ற தொடங்கி உள்ளனர்.

சிவகார்த்திகேயன் தனது 5 படங்களுக்கு டி. இமானுக்கு இசையமைக்க வாய்ப்பு வழங்கிய நிலையில், அவரை துரோகி என தூக்கி எறிந்து விட்டார். இந்நிலையில், அடுத்து பார்த்திபன் பட வாய்ப்பை கொடுக்கிறாரே அவரை என்ன சொல்லப் போகிறாரோ இமான் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கமலுக்கு ஆப்பு வைத்த சிவகார்த்திகேயன்… மனுஷன் தலைல துண்டு போடாம பாத்துக்கோப்பா…

பார்த்திபன் அடுத்து இயக்கி நடிக்க உள்ள வித்தியாசமான படத்துக்கு டி. இமானை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்த பதிவிட்ட ட்வீட்டே வித்தியாசமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

“வா’வென
வாய் பிளந்து
வரவேற்று
வாய் நனைய முத்தமிட்டு
இறுதிவரை இருக்க விரும்பி
இறுக அணைத்தாலும்…
திட்டமிட்டபடி
சட்டென விட்டு
வி ல கி
சென்றுவிடும்
சென்ற வினாடிகள் !!!

தும்பைப் பூவின் மீது
தூய்மையான
பனித்துளி படர்ந்து
தும்பிகளின் மெல்லிய ரீங்காரத்தைக் கூட
மெலோடியாய் ரசிக்கும் சில உறவுகளும்
பூப்பதுமுண்டு!
இசையை விட தூய்மையானது எது?
சென்ற படத்தில் ரகு மானுடன் இணைந்த நான்
வரும் படத்திலும் ஒரு மானுடன் இணைகிறேன்.
இம்மான் …. இமான்!
அபார ஞானமும்
அயராத உழைப்புமாய்
அடுத்தடுத்த மணிகளில் மனிதர் 5 பாடல்களை பிரசவித்தார்.இன்னும் இரண்டு கர்ப்பத்தில்.
மைனா’வின் குரல் போல் இவரின் இசையும் இனிமை.அன்றிலிருந்து அவரின் இசையும் ஒரு அன்றில் பறவையாய் என் ரசனை வானில் பறந்துக் கொண்டிருந்தது.
இனி…
இனிமை
இசையாய்…
Ok!
Tittle ?
அறிவிப்போம் விரைவில்!” என போஸ்ட் போட்டுள்ளார்.

 

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top