×

தனிஷ்க் விளம்பரத்துக்கு ஆதரவாக பி சி ஸ்ரீராம்! டிவிட்டரில் கருத்து!

சில நாட்களுக்கு முன்னர் தனிஷ்க் நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சில நாட்களுக்கு முன்னர் தனிஷ்க் நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தனிஷ்க் நிர்வாகம் விளம்பர படம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் இஸ்லாமிய மாமியார் ஒருவர் தன் இந்து மருமகளுக்கு நகைகள் வாங்கி வளைகாப்பு நடத்துவதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மதம் மாறி காதல் திருமணம் செய்வதை இது ஊக்குவிப்பதாக இருப்பதாக கூறி இந்த விளம்பரத்தின் மீது தேவையற்ற சர்ச்சைகள் எழுந்தன. அதை தொடர்ந்து தனிஷ்க் நிறுவனத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் ட்ரெண்டானதால் அந்த விளம்பரத்தை நிறுவனம் பின் நிறுத்துவதாக அறிவித்தது. மேலும் தனிஷ்க் கடையின் மீது தாக்குதல்களும் நடந்தன.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து பேசியுள்ள ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் வெளியிட்டுள்ள டிவீட்டில் ‘அன்பின் மொழி பேசும் ஓர் அழகான விளம்பரம், அன்பை நேசிப்பவர்களைக் காட்டிலும் அன்பை வெறுப்பவர்களால் இப்போது நீக்கப்பட்டுள்ளது. இந்தியா ஒன்றன் பின் ஒன்றாக தனது அழகையும், ஒற்றுமை மீதான நம்பிக்கையையும் இழந்து வருகிறது. எதிர்கால சந்ததி வெறுப்பு தான் அன்பின் புதிய வார்த்தை என்று புரிந்துகொள்ளும் நிலைக்கு செல்லும்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News